எங்கள் நாட்டில் உன்னை பணக்காரர் ஆக விடமாட்டேன்: புலம்பெயர்ந்தோர் ஒருவர் ஜேர்மனியில் சந்தித்த அதிர்ச்சி
பல்வேறு கனவுகளுடன் ஜேர்மனிக்கு புலம்பெயரும் பலர், கசப்பான அனுபவங்களுடன் மீண்டும் ஜேர்மனியை விட்டு வெளியேறிக்கொண்டிருக்கிறார்கள்.
புலம்பெயர்ந்தோர் ஒருவர் சந்தித்த அதிர்ச்சி
கிரீக் தீவான Samos தீவிலிருந்து தனது 18ஆவது வயதில் சிவில் எஞ்சினியரிங் படிப்பதற்காக ஜேர்மனிக்கு வந்தார் Giannis N.
தற்போது கையில் ஒரு முதுகலைப் பட்டமும் வைத்திருக்கும் நிலையிலும், மீண்டும் தனது நாட்டுக்கே செல்லும் மனநிலைக்கு வந்துவிட்டார் Giannis.
பல இடங்களில் பணியாற்றி, கடைசியாக ஃப்ரீலேன்சராக பணியாற்றிவந்த Giannis, ஜேர்மனியில் ஒரு நல்ல வாழ்க்கையை அமைத்துக்கொள்வதற்காக எல்லாவற்றையும் செய்தேன்.
ஆனால், எல்லா இடங்களிலும் தடைகளை சந்திக்க நேர்ந்தது என்கிறார். எல்லாவற்றுக்கும் மேல், தான் பணி செய்த ஒரு இடத்தில், தனக்கு வரவேண்டிய சுமார் 100,000 யூரோக்களை தர மறுத்த ஜேர்மானியர் ஒருவர், அதற்கு கூறிய காரணம் தன்னை அதிர்ச்சியடைய வைத்ததாகத் தெரிவிக்கிறார்.
உன்னை என் நாட்டில் பணக்காரனாக விடமாட்டேன் என்று கூறி, அந்த ஜேர்மானியர் அந்த 100,000 யூரோக்களை கொடுக்க மறுத்தாராம்.
Giannisஇன் அனுபவம் இப்படியென்றால், துருக்கி நாட்டவரான Utku Sen (33) இன் அனுபவம் இன்னொரு மாதிரி இருக்கிறது.
சைபர் செக்யூரிட்டி பொறியாளரான Utku, மூன்று ஆண்டுகள் ஜேர்மனியில் பணி புரிந்தபின் லண்டனுக்கு புறப்பட்டுவிட்டார்.
ஒரு துருக்கி நாட்டவர் என்ற வகையில், ஜேர்மனியில் ஒரு இரண்டாம் தரக் குடிமகனாகத்தான் உணர முடிந்தது என்கிறார் Utku.
ஜேர்மானிய சமூகத்துடன் ஒன்றிணைந்து வாழ பல தசாப்தங்கள் பிடிக்கும் என்று நினைக்கிறேன், அல்லது, அது நடக்காமலே கூட போகலாம் என்கிறார் அவர்.
பல்கேரியா நாட்டவரான Kalina Velikova (35), தான் படிக்கும்போதே சரளமாக ஜேர்மன் மொழி பேசக்கூடியவர் என்கிறார்.
ஆனாலும், தான் தனிமைப்படுத்தப்பட்டதாகவே உணர்ந்ததாக தெரிவிக்கிறார் Kalina. 2021ஆம் ஆண்டு தன் நாட்டுக்கே திரும்பிவிட்டார் அவர்.
ஆக, படித்திருந்தாலும், நல்ல வேலையில் இருந்தாலும், ஜேர்மன் மொழியில் சரளமாக பெசினாலும்கூட, புலம்பெயர்ந்தோர் ஜேர்மனியுடன் ஒன்றிணைந்து வாழ்வது கடினம் என்பது இவர்களுடைய அனுபவங்களிலிருந்து தெரிகிறது.
இந்நிலையில், 18 முதல் 65 வயது வரையுடைய புலம்பெயர்ந்தோரிடையே ஒரு ஆய்வு நடத்தப்பட்டபோது, நான்கில் ஒருவர் ஜேர்மனியிலிருந்து வெளியேற விரும்புவது தெரியவந்துள்ளது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |