புடின் விளையாடுகிறார்... ஜேர்மன் அமைச்சர் கடும் விமர்சனம்
புடின் உக்ரைனிலுள்ள ஆற்றல் அமைப்புகள் மீதான தாக்குதலை தற்காலிகமாக நிறுத்துவதாக ஒப்புக்கொண்ட பின்னரும், உக்ரைனில் பொதுமக்கள் வாழும் பகுதிகள் மீது ரஷ்யா தாக்குதல் நடத்தியுள்ளது.
ஜேர்மன் அமைச்சர் கடும் விமர்சனம்
ரஷ்ய ஜனாதிபதி புடினுடைய இந்த செயலை ஜேர்மன் பாதுகாப்புத்துறை அமைச்சரான போரிஸ் பிஸ்டோரியஸ் (Boris Pistorius) கடுமையாக விமர்சித்துள்ளார்.
புடினுக்கும் அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்புக்கும் இடையிலான ’மாபெரும் தொலைபேசி அழைப்புக்கு’ மறுநாள் இரவில் கூட, பொதுமக்கள் வாழும் இடங்கள் மீது நடத்தப்படும் தாக்குதல்கள் குறையவேயில்லை என்பதை நம்மால் காணமுடிகிறது என்று கூறியுள்ள போரிஸ், புடின் விளையாடுகிறார் என்று விமர்சித்துள்ளார்.
போரின் நடுவில் இருக்கும் உக்ரைன் ராணுவத்திற்கு மேற்கத்திய நாடுகள் வழங்கும் ராணுவ மற்றும் உளவுத்துறை தொடர்பான உதவிகளை முற்றிலுமாக நிறுத்துவதே அமைதிக்கான முக்கிய நிபந்தனை என்று கிரெம்ளின் வலியுறுத்துவது, ஏற்றுக்கொள்ள இயலாதது என்றும் அவர் கூறியுள்ளார்.
புடினின் நோக்கம், போர்நிறுத்தத்திற்குப் பின் அல்லது போர்நிறுத்தத்தின்போது, உக்ரைனுக்கு ஆதரவளிக்கும் நாடுகளை தடுத்துவிட்டு, மற்றொரு தாக்குதல் நிகழ்த்தப்படுமானால் உக்ரைன் தன்னைத்தான் பாதுகாத்துக்கொள்ளும் நிலையை உருவாக்குவதும் ஆகும் என்று கூறியுள்ள போரிஸ், அது வெளிப்படையாகவே தெரிகிறது என்றும் கூறியுள்ளார்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |