ஜேர்மனியில் அதிக வேலைவாய்ப்புகள் உள்ள 6 தொழில்கள்
ஜேர்மனியில் அதிக தேவை உள்ள 6 தொழில்கள் குறித்து பார்க்கலாம்.
அமெரிக்கா, பிரித்தானியா, அவுஸ்திரேலியா, கனடா போன்ற ஆங்கில மொழி நாடுகள் குடியேற்றக் கொள்கைகளை கடுமையாக்கிய நிலையில், ஜேர்மனி உலகளாவிய தொழில்முனைவோர்களுக்கும் மாணவர்களுக்கும் புதிய வாய்ப்புகளைத் திறந்து வைத்துள்ளது.
ஜேர்மனியின் வெளிநாட்டு அலுவலகத்தின் அதிகாரப்பூர்வ தளமான Deutschland.de வெளியிட்ட தகவலின்படி, தற்போது நாட்டில் 2 லட்சத்திற்கும் மேற்பட்ட வேலைவாய்ப்புகள் காலியாக உள்ளன.
குறிப்பாக, இன்ஜினீயர்கள், ஐ.டி. நிபுணர்கள், நர்சிங் பணியாளர்கள், கைவினைஞர்கள், போக்குவரத்து துறை நிபுணர்கள், இயற்கை விஞ்ஞானிகள் மற்றும் பசுமை வேலைகள் ஆகிய துறைகளில் அதிக தேவை காணப்படுகிறது.

1- இன்ஜினீயர்கள் (Engineers)
Industry 4.0 மாற்றத்தால், டிஜிட்டல் தொழில்நுட்பம் மற்றும் ஆட்டோமேஷன் வளர்ச்சியில் இன்ஜினீயர்களின் பங்கு மிக முக்கியமானதாக உள்ளது.
2- ஐ.டி. நிபுணர்கள் (IT Specialists)
சுமார் 1,49,000 வேலைவாய்ப்புகள் தற்போது திறந்துள்ளன. சைபர் பாதுகாப்பு, மென்பொருள் மேம்பாடு, தரவு பகுப்பாய்வு, நெட்வொர்க் நிர்வாகம் போன்ற துறைகளில் அதிக தேவை உள்ளது.
3- நர்சிங் பணியாளர்கள் (Nursing professionals)
முதியோர் மக்கள் தொகை அதிகரிப்பால், சுமார் 35,000 நர்சிங் பணியிடங்கள் காலியாக உள்ளன. வெளிநாட்டு நர்சிங் நிபுணர்களுக்கு விசா மற்றும் அங்கீகார நடைமுறைகள் எளிமைப்படுத்தப்பட்டுள்ளன.
4- கைவினைஞர்கள் (Craftsmen)
மின்சார தொழிலாளர்கள், மெக்கானிக்குகள், தச்சர்கள், பிளம்பர்கள் போன்ற துறைகளில் அதிக தேவை.

5- போக்குவரத்து நிபுணர்கள் (Transport professionals)
லாஜிஸ்டிக்ஸ் மற்றும் e-commerce வளர்ச்சியால், டிரைவர்கள் மற்றும் போக்குவரத்து மேலாளர்களுக்கு வேலைவாய்ப்பு அதிகரித்துள்ளது.
6- இயற்கை விஞ்ஞானிகள் மற்றும் பசுமை வேலைகள் (Natural scientists & Green jobs)
சுற்றுச்சூழல், உயிரியல், பசுமை ஆற்றல் துறைகளில் ஆராய்ச்சி மற்றும் வேலை வாய்ப்புகள் அதிகம்.
ஜேர்மனியின் Energiewende (எரிசக்தி மாற்றம்) திட்டத்துடன் இணைந்து, பசுமை வேலைகள் எதிர்காலத்தில் மிகப்பெரிய வாய்ப்புகளை வழங்கும் என நிபுணர்கள் கூறுகின்றனர்.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |
Germany job opportunities 2025, Germany 200000 vacancies healthcare IT, Engineers demand in Germany, Nursing jobs Germany visa, Cybersecurity jobs Germany, Skilled trades Germany work visa, Transport logistics jobs Germany, Natural scientists careers Germany, Green jobs Germany Energiewende, Work in Germany for Indians