ஜேர்மனியின் Opportunity Card: இந்தியர்கள் வேலைக்கு எப்படி விண்ணப்பிக்கலாம்?
வெளிநாட்டு தொழிலாளர்களுக்காக ஜேர்மனி அரசு அறிமுகப்படுத்தியுள்ள Opportunity Card, இந்தியர்களுக்கு ஜேர்மனியில் வாழும், வேலை பார்க்கும், சம்பாதிக்கும் வாய்ப்பை உருவாக்கும் முக்கிய அடையாளமாக மாறியுள்ளது.
இந்த வாய்ப்பு அட்டை, பணியிட ஒப்பந்தமின்றியும் (job offer) ஜேர்மனியில் சென்று வேலை தேடுவதற்கான ஒரு ஆண்டு கால பரவலான அனுமதியைக் கொடுக்கிறது.
இதன் மூலம் இந்தியர்கள் பார்ட்டைம் வேலை (வாரத்திற்கு 20 மணி நேரம் வரை) செய்யலாம் அல்லது பணி பயிற்சி பெறலாம்.
யார் விண்ணப்பிக்கலாம்?
இந்த வாய்ப்பு அட்டைக்கு விண்ணப்பிக்க நீங்கள் புள்ளிகள் அடிப்படையிலோ (points-based) அல்லது திறமை வாய்ந்த பணியாளராகவோ (skilled worker) விண்ணப்பிக்கலாம்.
புள்ளிகள் அடிப்படையிலான விண்ணப்பம்:
அரசு அங்கீகாரம் பெற்ற முடிக்கப்பட்ட டிகிரி அல்லது 2 ஆண்டு தொழில்நுட்ப பயிற்சி
ஜேர்மன் A1 அல்லது ஆங்கில B2 CEFR மொழி நிபுணத்துவம்
குறைந்தபட்சம் 6 புள்ளிகள் தேவை (points-based system)
திறமை வாய்ந்த பணியாளர் விண்ணப்பம்:
ஜேர்மனியில் பெற்ற அல்லது அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழக டிகிரி அல்லது தொழில்நுட்ப சான்றிதழ்
இருவகையிலும், ஜர்மனியில் உங்கள் வாழ்வை நடத்துவதற்கான நிதி ஆதாரமும் முக்கியமானது. குறைந்தபட்சம் மாதம் 1,091 யூரோ தேவைப்படும். இது Blocked Account அல்லது Declaration of Commitment மூலம் நிரூபிக்கலாம்.
எப்படி விண்ணப்பிப்பது?
விண்ணப்பம் ஜேர்மன் தூதரகத்தின் Consular Services Portal இணையதளம் வாயிலாக செய்யலாம்.
நீங்கள் எந்த மாநிலத்தைச் சேர்ந்தவராக இருக்கிறீர்களோ அதன்படி கீழ்கண்ட தூதரகங்களில் விண்ணப்பிக்கலாம்:
பெங்களூரு தூதரகம்: கர்நாடகா, கேரளா
சென்னை தூதரகம்: தமிழ்நாடு, ஆந்திரா, தெலுங்கானா, புதுச்சேரி
கொல்கத்தா தூதரகம்: பீகார், ஜார்க்கண்ட், ஒடிசா, அருணாச்சல பிரதேசம், அசாம், மணிப்பூர், மேகாலயா, மிசோரம், நாகாலாந்து, திரிபுரா மற்றும் மேற்கு வங்கம் ஆகிய மாநிலங்கள்
மும்பை தூதரகம்: சத்தீஸ்கர், கோவா, குஜராத், மத்தியப் பிரதேசம், மகாராஷ்டிரா, யூனியன் பிரதேசங்களான டாமன் மற்றும் டியூ மற்றும் யூனியன் பிரதேசங்களான தாத்ரா மற்றும் நகர் ஹவேலி
டெல்லி தூதரகம்: ஹரியானா, இமாச்சலப் பிரதேசம், பஞ்சாப், ராஜஸ்தான், சிக்கிம், உத்தரபிரதேசம், உத்தரகாண்ட் மற்றும் யூனியன் பிரதேசங்களான சண்டிகர், டெல்லி, ஜம்மு-காஷ்மீர், லடாக், அந்தமான் மற்றும் நிக்கோபார் தீவுகள், லட்சத்தீவுகள், மினிகாய், அமிண்டிவி தீவுகள் மற்றும் பூட்டான்
சில தூதரகங்கள் தனியார் சேவை நிறுவனங்களுடன் இணைந்து விண்ணப்பங்களை செயலாக்குகின்றன. இதற்காக சிறிய சேவை கட்டணம் வசூலிக்கப்படலாம்.
எதிர்கால வாழ்க்கைக்கான புதிய வாய்ப்பு
ஜேர்மனியின் வேலைவாய்ப்பு சந்தை திறக்கப்படுவதால் இந்தியர்களுக்கு, குறிப்பாக இளநிலை பட்டதாரிகள் மற்றும் தொழில்நுட்பம் சார்ந்த பணியாளர்கள், புதிய வாழ்க்கைத் திசையில் பயணம் செய்ய இது முக்கிய வாய்ப்பாக அமைகிறது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |
Germany Opportunity Card India, Jobs in Germany for Indians, How to apply Germany visa 2025, Indian skilled workers in Germany, Germany job seeker visa for Indians