அச்சுறுத்தும் சீனாவை எதிர்க்க மற்றொரு ஆசிய நாட்டுடன் கைகோர்க்கும் ஜேர்மனி
தொடர்ந்து அச்சுறுத்தலாக மாறிவரும் சீனாவை எதிர்க்க, ஜப்பானுடன் கைகோர்த்துள்ளது ஜேர்மனி.
ஜப்பான் சென்றுள்ள ஜேர்மன் வெளியுறவு அமைச்சர்
உக்ரைன் மீது ரஷ்யா தாக்குதல் தொடர்ந்ததிலிருந்தே, தனது பாதுகாப்பு தொடர்பில் பல்வேறு நடவடிக்கைகளைத் துவங்கியுள்ள ஜேர்மனி, சக நாடுகளுடனான உறவுகளை வலுப்படுத்தும் முயற்சியிலும் இறங்கியுள்ளது.
அவ்வகையில், ஆசியாவில் எல்லைகளை மாற்றிக்கொண்டும், அச்சுறுத்திக்கொண்டும் இருக்கும் சீனாவை எதிர்கொள்ளும் வகையில், மற்றொரு ஆசிய நாடான ஜப்பானுடன் கைகோர்க்க முடிவு செய்துள்ளது ஜேர்மனி.
இருதரப்பு உறவுகளை வலுப்படுத்தும் நோக்கில், ஜேர்மன் வெளியுறவு அமைச்சரான Johann Wadephul தனது ஜப்பான் பயணத்தை துவக்கியுள்ளார்.
ஜப்பானை ஜேர்மனியின் பிரீமியம் கூட்டாளர் என விமர்சித்துள்ள அவர், ஜப்பானும் ஜேர்மனியும் நீண்டகால, ஆழமான மற்றும் நெருக்கமான நட்பைப் பகிர்ந்துகொள்வதாகவும் தெரிவித்துள்ளார்.
ஜப்பான் வெளியுறவு அமைச்சரான Takeshi Iwayaஉடன் இணைந்து ஊடகவியலாளர்களை சந்தித்த Wadephul, ஜனநாயகமும் சட்டத்தின் விதியின் கொள்கைகளை கடைப்பிடிப்பதும் நெருக்கடியான மற்றும் போர்க்காலங்களின்போது அவசியமாகும் என்றும் கூறினார்.
சீனா கிட்டத்தட்ட வெளிப்படையாகவே மிரட்டுவதாகவும், எல்லைகளை தனக்கு சாதகமாக மாற்றிகொள்வதாகவும் குற்றச்சாட்டு முன்வைத்துள்ள Wadephul, உக்ரைன் போரில் சீனா ரஷ்யாவுக்கு ஆதரவளிப்பதையும் விமர்சித்துள்ளார்.
சீனா, போருக்கும் பொதுமக்களுக்கும் பயன்படக்கூடிய பொருட்களை ரஷ்யாவுக்கு வழங்கும் நாடு என்றும், ரஷ்யாவின் தலைசிறந்த எண்ணெய் மற்றும் எரிவாயு வாங்கும் வாடிக்கையாளர் என்றும், சீனாவின் ஆதரவு இல்லாமல் உக்ரைனில் ரஷ்யப் போருக்கு சாத்தியமில்லை என்றும் சரமாரியாக சீனா மீது விமர்சனம் முன்வைத்துள்ளார் Wadephul.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |