வாரத்துக்கு நான்கு நாட்கள் வேலையா ஐந்து நாட்கள் வேலையா? ஜேர்மன் மக்கள் முடிவு
உலக நாடுகள் சில, வாரத்துக்கு நான்கு நாட்கள் மட்டும் வேலை செய்யும் நடைமுறையை பரிசோதித்து வருகின்றன.
அவ்வகையில், வாரத்துக்கு நான்கு நாட்கள் வேலையா, ஐந்து நாட்கள் வேலையா? ஜேர்மன் மக்கள் எதை விரும்புகிறார்கள் என்பதை அறிவதற்காக ஆய்வொன்று மேற்கொள்ளப்பட்டது.
ஜேர்மன் மக்கள் முடிவு
ஆய்வின் முடிவுகளில், வாரத்துக்கு நான்கு நாட்கள் வேலை, நாளொன்றிற்கு 10 மணி நேரம் வேலை என்னும் நடைமுறைக்கு 38 சதவிகிதம் பேர் ஆதரவு தெரிவித்துள்ளார்கள்.
அதாவது, வாரத்துக்கு நான்கு நாட்கள் வேலை, நாளொன்றிற்கு 10 மணி நேரம் வேலை செய்யவேண்டும், வாரத்துக்கு ஐந்து நாட்கள் வேலை, நாளொன்றிற்கு 8 மணி நேரம் வேலை செய்தால் போதும்.
20 சதவிகிதம் பேர், வாரத்துக்கு நான்கு நாட்கள் வேலைக்கு எதிராகவும், 37 சதவிகிதம் பேர் நடுநிலையாகவும் வாக்களித்துள்ளார்கள்.
வாரத்துக்கு நான்கு நாட்கள் வேலை, நாளொன்றிற்கு 10 மணி நேரம் வேலை என்னும் நடைமுறையால் கூடுதல் நாட்கள் குடும்பத்துடன் செலவிட முடியும் என்கிறார்கள் அதற்கு ஆதரவளிப்போர்.
ஆனால், எட்டு மணி நேரத்துக்கு மேல் வேலை செய்வதால் கூடுதல் பலனில்லை, ஒருவரால் எட்டு மணி நேரம் வரை மட்டுமே productivity கொடுக்கமுடியும் என ஒரு வாதம் எதிர் தரப்பில் வைக்கப்பட்டுள்ளது.
அத்துடன், பணியாளர்களுக்கு பணிச்சுமை அதிகமாகிவிடும் என்றும், 10 மணி நேர பணி முடித்து வீட்டுக்குச் சென்றால், குடும்பத்துடன் நேரம் செலவிடவோ, பொழுதுபோக்கவோ நேரம் கிடைக்காது என்றும் அவர்கள் கருத்து தெரிவித்துள்ளார்கள்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |