பச்சை பாலின் தீமைகளை அறியாத ஜேர்மன் மக்கள்: ஆய்வு முடிவுகள்
ஜேர்மனியில், பல இடங்களில் இன்னமும் தானியங்கி இயந்திரங்களில் கிருமிநீக்கம் செய்யப்படாத பச்சை பால் விநியோகம் செய்யப்படுகிறதாம்.
பச்சை பாலின் தீமைகளை அறியாத மக்கள்
விடயம் என்னவென்றால், ஜேர்மன் மக்களில் 1,000 பேரை ஆய்வொன்றிற்குட்படுத்தியபோது, அவர்களில் ஐந்தில் ஒருவர், தங்களுக்கு கிருமிநீக்கம் செய்யப்படாத பச்சை பால் விநியோகம் செய்யப்படுவதை அறிந்திருப்பதாக தெரிவித்துள்ளனர்.
ஆனால், கிருமிநீக்கம் செய்யப்படாத பச்சை பாலால் ஏற்படும் தீமைகள் குறித்து பெரும்பாலானோர் கவலைப்படவில்லை என்பது ஆய்வில் தெரியவந்துள்ளது.
விடயம் என்னவென்றால், பாலில் சால்மோனெல்லா, கேம்பைலோபேக்டர், லிஸ்டீரியா, ஸ்டெபைலோகாக்கஸ், புரூசெல்லா, கால்நடைகளுக்கு காசநோயை உண்டாக்கக்கூடிய Mycobacterium bovis மற்றும் யெர்சினியா ஆகிய பாக்டீரியாக்களும், பறவைக்காய்ச்சலை உண்டாக்கும் H5N1 முதலான வைரஸ்களும் இருக்கும்.
கிருமிநீக்கம் அதாவது pasteurization என்னும் செயல்முறைக்கு உட்படுத்தாத பாலை காய்ச்சாமல் அப்படியே அருந்துவதால், குழந்தைகள், கர்ப்பிணிகள் மற்றும் முதியவர்களுக்கு அவை நோய்களை உருவாக்கக்கூடும் என்பது குறிப்பிடத்தக்கது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |