ரஷ்யாவை தடுக்கும் முயற்சி: 25 பில்லியன் யூரோ மதிப்பில் ஆயுதங்கள் வாங்க ஜேர்மனி திட்டம்
ரஷ்யாவை தடுக்கும் முயற்சியாக, 25 பில்லியன் யூரோ மதிப்பில் ஆயுதங்களை வாங்க திட்டமிட்டுள்ளது ஜேர்மனி.
ரஷ்யாவிற்கு எதிராக ஐரோப்பா முழுவதும் பாதுகாப்பை வலுப்படுத்தும் முயற்சியின் ஒரு பகுதியாக, ஜேர்மனி சுமார் 25 பில்லியன் யூரோ மதிப்பிலான மிகப்பாரிய ஆயுதங்களை வாங்கும் திட்டத்தை பரிசீலித்து வருகிறது என Bloomberg தகவல் தெரிவித்துள்ளது.
இந்த திட்டத்தின் கீழ், ஜேர்மனி 2,500 GTK Boxer கவச வாகனங்கள் மற்றும் 1,000 Leopard 2 போர் டாங்கிகள் வாங்குவதற்காக திட்டமிட்டுள்ளது.
இந்த வாகனங்கள் NATO-வின் எதிர்கால பிரிகேட்கள் அமைப்புக்காகவும், ரஷ்யா செலுத்தும் நெருக்கடியை சமாளிக்கவும் பயன்படும்.
Leopard 2 டாங்கிகள் KNDS Deutschland மற்றும் Rheinmetall நிறுவனங்களால் தயாரிக்கப்படுகின்றன. Boxer வாகனங்களை ARTEC (இரு நிறுவனங்களின் கூட்டு நிறுவனம்) உருவாக்குகிறது. இந்த டாங்கிகள் தற்போது உக்ரைனுக்கே வழங்கப்பட்டு போரில் சோதிக்கப்பட்டுள்ளன.
ஜேர்மனியின் பாதுகாப்பு அமைச்சர் போரிஸ் பிஸ்டோரியஸ், இந்த திட்டங்களை ஆய்வு செய்து வருகிறார். இறுதி ஒப்புதல் 2025 முடிவுக்கு முன் ஜேர்மனி பாராளுமன்றத்தில் எதிர்பார்க்கப்படுகிறது.
ஜேர்மனிக்கு NATO மற்றும் அமெரிக்கா அளிக்கும் அழுத்தம் அதிகரித்துள்ள நிலையில், ஜேர்மனி தனது GDP-யின் 5 சதவீதத்தை பாதுகாப்பிற்காக 2035-க்குள் செலவிடும் உறுதியை கடந்த ஜூன் 25-ல் நடந்த NATO உச்சி மாநாட்டில் வெளிப்படுத்தியது.
இந்த நடவடிக்கைகள், ரஷ்யாவின் போர் சார்ந்த பொருளாதாரம், இராணுவ விரிவாக்கம் மற்றும் ஐரோப்பாவை பலப்படுத்தும் முயற்சிகள் ஆகியவற்றுக்கான பதிலாக பார்க்கப்படுகிறது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |