பாதுகாப்பு பட்ஜெட்டை 60 பில்லியன் யூரோவாக உயர்த்த திட்டமிட்டுள்ள ஜேர்மனி
ஜேர்மன் அரசாங்கம் அதன் பாதுகாப்பு பட்ஜெட்டை 60 பில்லியன் யூரோவாக உயர்த்த திட்டமிட்டுள்ளது.
ஜேர்மனியின் பாதுகாப்பு துறை அமைச்சரான போரிஸ் பிஸ்டோரியஸ், 2025-ஆம் ஆண்டு தொடங்கியதிலிருந்து, நாட்டின் பாதுகாப்பு செலவுகளை ஆண்டுதோறும் 60 பில்லியன் யூரோக்களுக்கு மேல் உயர்த்த வேண்டும் என வலியுறுத்தியுள்ளார் என்று Reuters தகவல் தெரிவித்துள்ளது.
2024-ஆம் ஆண்டில் ஜேர்மனியின் வழக்கமான பாதுகாப்பு பட்ஜெட் 52 பில்லியன் யூரோவாக இருந்தது.
இது தவிர, உக்ரைனில் ரஷ்யாவின் படையெடுப்பைத் தொடர்ந்து, 100 பில்லியன் யூரோ சிறப்பு நிதியில் இருந்து 20 பில்லியன் யூரோ கூடுதலாக வழங்கப்பட்டது. இந்த சிறப்பு நிதி 2028-ஆம் ஆண்டுக்குள் முழுமையாக பயன்படுத்தப்பட உள்ளது.
மூன்றாம் தலைமுறை பாதுகாப்புத் திட்டங்களை முன்னேற்றும் நோக்குடன், 2025-இல் 63 பில்லியன் யூரோ வரை பாதுகாப்பு செலவு திட்டம் உள்ளது என்றும், அடுத்த நான்கு ஆண்டுகளுக்குள் இதே அளவு செலவை நிலைத்துவைக்க திட்டமிடப்படுவதாகவும், தகவல்கள் தெரிவிக்கின்றன.
ஆனால், இந்த நிதி எவ்வாறு சிறப்பாக பயன்படுத்தப்படும் என்பது ஒரு பெரும் சவாலாக உள்ளதாகவும், பாதுகாப்புத் துறை உற்பத்தி திடீரென அதிகரிக்க முடியாத சூழல் காரணமாக திட்டங்கள் தாமதமாகும் அபாயம் உள்ளதாகவும் கூறப்படுகிறது.
2024-ல், ஜேர்மனி நேட்டோவின் 2% இலக்கை எட்ட முடியவில்லை. நிதி உரிய நேரத்தில் பகிர்ந்தளிக்கப்படாமை முக்கிய காரணமாக உள்ளது.
இந்நிலையில், 2025 பாதுகாப்பு பட்ஜெட் விவாதங்கள் முடிவடைந்திருக்கவில்லை எனவும், பாதுகாப்பு அமைச்சகம் இதை உறுதிப்படுத்த மறுத்துள்ளது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |
Germany defense budget 2025, Boris Pistorius defense spending, German military funding, Germany military expenditure, German defense industry growth, Russia Ukraine war impact Germany