புலம்பெயர்தல் தொடர்பில் ஜேர்மனி எடுக்கவிருக்கும் மற்றொரு கடும் நடவடிக்கை
ஜேர்மனியில், பிரெட்ரிக் மெர்ஸ் தலைமையிலான புதிய அரசு பதவியேற்றுள்ளதைத் தொடர்ந்து, புலம்பெயர்தலுக்கு எதிரான நடவடிக்கைகள் தொடர்ச்சியாக அறிவிக்கப்பட்டுவருகின்றன.
அவ்வகையில், மேலும் ஒரு கட்டுப்பாட்டை அமுல்படுத்த ஜேர்மன் அரசு திட்டமிட்டுவருகிறது.
புலம்பெயர்தல் தொடர்பில் மற்றொரு கடும் நடவடிக்கை
ஆம், family reunification என்னும் நடைமுறையை ரத்து செய்ய ஜேர்மனி அரசு திட்டமிட்டுவருகிறது.
அதாவது, ஜேர்மனியில் இருக்கும் அகதிகள் நிலை பெற தகுதியற்ற, அதே நேரத்தில், தங்கள் நாட்டுக்கு திரும்பி சென்றால் ஆபத்து என்பதால் ஜேர்மனியில் வாழ அனுமதியளிக்கப்பட்டுள்ள, subsidiary protection status என்னும் நிலையிலிருக்கும் புலம்பெயர்ந்தோரின் குடும்பத்தினர், ஜேர்மனிக்கு வந்து தங்கள் குடும்பத்தினருடன் இணைந்துகொள்வதற்கு தடை விதிக்கப்பட உள்ளது.
Peter Juelich/epd/picture alliance
குறைந்தபட்சம், அடுத்த இரண்டு ஆண்டுகளுக்கு இந்த தடையை நடைமுறைப்படுத்த ஜேர்மன் அரசு திட்டமிட்டுவருகிறது.
அரசின் இந்த திட்டத்துக்கு எதிராக கடும் விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டுவருகின்றன.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |