வீடுகள் தட்டுப்பாடு... ஜேர்மனியின் 'turbo construction’ திட்டம்
ஜேர்மனியில் வீடுகள் தட்டுப்பாடு பிரச்சினையைத் தீர்க்க, புதிய திட்டம் ஒன்றை முன்வைத்துள்ளது ஜேர்மன் அரசு.
ஜேர்மனியின் 'turbo construction’ திட்டம்
ஜேர்மனியைப் பொருத்தவரை, அங்கு கடுமையான வீடுகள் தட்டுப்பாடு நிலவுகிறது. வீடுகள் குறைவாக இருப்பதால், பெரிய நகரங்கள் பலவற்றில் போட்டி காரணமாக வாடகையும் எக்கச்சக்கமாக உள்ளது.
அதே நேரத்தில், அங்கு வீடு கட்ட ஆகும் காலத்தைவிட, வீடு கட்டுவதற்கான அனுமதி பெற நீண்ட காலம் காத்திருக்கும் நிலை உள்ளது.
எனவே, இந்த நிலையை மாற்ற திட்டம் ஒன்றை முன்வைத்துள்ளதாக ஜேர்மனியின் புதிய கட்டுமானத்துறை மற்றும் வீட்டு வசதித்துறை அமைச்சரான Verena Hubertz தெரிவித்துள்ளார்.
இம்மாதம், அதாவது, ஜூலை மாதம் 30ஆம் திகதி தாக்கல் செய்யப்பட இருக்கும் 2026ஆம் ஆண்டின் பட்ஜெட்டில், வீடுகள் கட்டுவதற்காக அரசு செய்யவிருக்கும் செலவு குறித்த விடயம் முக்கிய இடம் பிடிக்க உள்ளது.
ஜேர்மனியில் வீடு கட்டவேண்டுமானால், அதற்காக அனுமதி பெறுவதற்கு நீண்ட காலம் காத்திருக்கவேண்டும்.
ஆகவே, அந்த நிலையை மாற்றுவதற்காக, வீடுகள் கட்டுவதற்கான அனுமதியை அளிக்கு அதிகாரம் உள்ளூர் கவுன்சில்களுக்கு அளிக்கப்படும்.
ஆக, வீடுகள் தட்டுப்பாடு பிரச்சினையைத் தீர்ப்பதற்காக, turbo வேகத்தில், அதாவது, மிக வேகமாக அனுமதிகள் பெற்று வீடுகள் கட்டும் வகையில் அரசு சில திட்டங்களை முன்வைத்துள்ளது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் |