ஜேர்மன் எல்லையில் தடுத்து நிறுத்தப்படும் புலம்பெயர்வோர்: பொலிஸ் துறை தலைவர் எதிர்ப்பு
ஜேர்மனிக்கு வரும் புகலிடக்கோரிக்கையாளர்கள் உள்ளிட்ட புலம்பெயர்வோர், ஜேர்மன் எல்லையில் தடுத்து நிறுத்தப்படும் விடயம் குறித்து பொலிஸ் துறை தலைவர் விமர்சனம் முன்வைத்துள்ளார்.
பொலிஸ் துறை தலைவர் எதிர்ப்பு
ஜேர்மன் ஃபெடரல் பொலிஸ் ஆணையரான Uli Grötsch, ஜேர்மனிக்கு வரும் புகலிடக்கோரிக்கையாளர்கள் ஜேர்மன் எல்லையில் தடுத்து நிறுத்தப்படுவது சட்டப்படியானதுதானா என்பது குறித்து சந்தேகம் எழுப்பியுள்ளார்.
அத்துடன், இப்படி சுமார் 14,000 பொலிசார் புலம்பெயர்வோரைத் தடுப்பதற்காக எல்லைக்கு அனுப்பப்படுவதால், பொலிசாரின் வழக்கமான வேலைகள் பாதிக்கப்படுவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
பொலிசார் எல்லையில் வேலை பார்க்கவேண்டியுள்ளதால், அவர்கள் ஓவர்டைம் பார்க்கவேண்டியுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
அதனால், பொலிசார் வழக்கமாக செய்யவேண்டிய மற்ற வேலைகளைச் செய்ய ஆட்கள் இல்லாத நிலை ஏற்படுவதாகவும் தெரிவித்துள்ளார் Uli Grötsch.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |