பிரித்தானியாவுக்கு அரசு முறைப்பயணம் மேற்கொள்ளும் ஜேர்மன் ஜனாதிபதி
ஜேர்மனியின் ஜனாதிபதி, அரசு முறைப்பயணமாக பிரித்தானியா செல்ல இருக்கிறார்.
பிரித்தானியாவுக்கு அரசு முறைப்பயணம்
ஜேர்மனியின் ஜனாதிபதியான ஃப்ரான்க் வால்ட்டர் ஸ்டெயின்மேயர் (Frank-Walter Steinmeier), தன் மனைவியான எல்க்கா பூடன்பென்டருடன் (Elke Budenbender) பிரித்தானியாவுக்கு மூன்று நாள் அரசு முறைப்பயணம் மேற்கொள்ள இருக்கிறார்.

நாளை, அதாவது, டிசம்பர் மாதம் 3ஆம் திகதி அவர்களுடைய பயணம் துவங்குகிறது.
ஃப்ரான்க் வால்ட்டர் ஸ்டெயின்மேயர், 27 ஆண்டுகளில் முதன்முறையாக பிரித்தானியா வரும் ஜேர்மன் ஜனாதிபதி ஆவார்.
பிரித்தானிய மன்னர் சார்லசும் ராணி கமீலாவும் ஜேர்மன் ஜனாதிபதி ஸ்டெயின்மேயருக்கு விண்ட்ஸர் மாளிகையில் அரசு விருந்தளிக்கும் நிலையில், ஸ்டெயின்மேயர் எக்கச்சக்கமான நிகழ்ச்சிகளில் கலந்துகொள்ள இருக்கிறார்.

மறைந்த மகாராணி இரண்டாம் எலிசபெத் கல்லறையில் மலர்கள் வைத்து மரியாதை செய்தல், பிரித்தானிய நாடாளுமன்றத்தில் உரையாற்றுதல், ஜேர்மன் பிரீமியர் லீக் விளையாட்டு வீரர்களை சந்தித்தல், பிரித்தானிய பிரதமர் கெய்ர் ஸ்டார்மரை சந்தித்தல் போன்ற பல நிகழ்ச்சிகளில் கலந்துகொள்ள இருக்கிறார் ஸ்டெயின்மேயர்.
பொதுவாகவே பிரித்தானியாவுக்கு அரசு முறைப்பயணமாக வரும் தலைவர்களுக்கு எக்கச்சக்க மரியாதை வழங்குவது மன்னர் சார்லசின் வழக்கம்.
இந்நிலையில், ஸ்டெயின்மேயர், குதிரைகள் பூட்டப்பட்ட ரதத்தில் விண்ட்ஸர் மாளிகைக்கு அழைத்துச் செல்லப்பட இருப்பதுடன், அதன்பின் அவருக்கு ஆக்ஸ்போர்டு பல்கலையில் கௌரவ பட்டம் ஒன்றும் வழங்கப்பட உள்ளது குறிப்பிடத்தக்கது.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் |