உக்ரைனுக்கு நீண்ட தூர ஏவுகணை: அது எங்களுக்கு முக்கியத்துவம் இல்லை என மறுத்த பிரபல நாடு
உக்ரைனுக்கு நீண்ட தூர இலக்குகளை தாக்கி அழிக்க கூடிய Taurus ஏவுகணைகள் வழங்குவதை ஜேர்மன் மறுத்துள்ளது.
நீண்ட தூர ஏவுகணை
ரஷ்யா முன்னெடுத்து வரும் போர் நடவடிக்கையில் உக்ரைனுக்கு தேவையான போர் ஆயுதங்களை அமெரிக்கா, ஜேர்மனி மற்றும் பிரான்ஸ் போன்ற மேற்கத்திய நாடுகள் வழங்கி உதவி வருகின்றனர்.
இருந்தும் மேற்கத்திய நாடுகளிடம் நீண்ட தூர இலக்குகளை தாக்கி அழிக்க கூடிய ஏவுகணை வழங்குமாறு உக்ரைன் தொடர்ந்து கோரிக்கை முன்வைத்து வருகிறது.
Reuters
ஆனால் இத்தகைய நீண்ட தூர இலக்குகள் கொண்ட ஏவுகணைகள் ரஷ்யா எல்லைகளை தாக்க பயன்படுத்தப்படும் என்பதாலும், அதன் விளைவுகள் வேறு விதமாக தங்கள் நாடுகளை நோக்கி திரும்ப கூடும் என்பதாலும் பல்வேறு நாடுகளும் உக்ரைனுக்கு நீண்ட தூர ஏவுகணைகளை வழங்க மறுத்து வருகின்றனர்.
ஜேர்மனி மறுப்பு
இந்நிலையில் நீண்ட தூர இலக்குகளை தாக்கி அழிக்க கூடிய Taurus ஏவுகணைகளை உக்ரைனுக்கு ஜேர்மனி வழங்க இருப்பதாக வெளியான தகவலை ஜேர்மனி மறுத்துள்ளது.
Germany refuses to supply Ukraine with long-range missiles Taurus
— NEXTA (@nexta_tv) August 3, 2023
"We still believe that this is not our top priority right now. We are not the only ones who do not deliver. Our American allies are not supplying these cruise missiles either. Our missiles have a special range,"… pic.twitter.com/OZda0Ne3a1
இது தொடர்பாக ஜேர்மன் பாதுகாப்பு அமைச்சர் போரிஸ் பிஸ்டோரியஸ் தெரிவித்த கருத்தில், உக்ரைனுக்கு நீண்ட தூர ஏவுகணை வழங்குவது தற்போதைக்கு எங்களுக்கு முதல் முக்கியத்துவமானது என்று நாங்கள் நம்பவில்லை என தெரிவித்துள்ளார்.
அத்துடன் இதனை உக்ரைனுக்கு நாங்கள் மட்டும் வழங்க மறுக்கவில்லை. எங்களுடைய கூட்டாளி அமெரிக்காவும் உக்ரைனுக்கு நீண்ட தூர கப்பல் ஏவுகணைகளை உக்ரைனுக்கு வழங்கவில்லை என குறிப்பிட்டுள்ளார்.
மேலும் எங்களுடைய ஏவுகணைகள் சிறப்பு வரம்புகளை கொண்டுள்ளது என்றும் போரிஸ் பிஸ்டோரியஸ் தெரிவித்துள்ளார்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |