நேட்டோ கூட்டாளிகளுடன் கைகோர்க்க மறுக்கும் ஜேர்மனி: புடின் பயம் காரணமா?
உக்ரைனை ரஷ்யா ஊடுருவிய விவகாரத்தில், ஆரம்பம் முதலே ரஷ்யாவை எதிர்க்க ஜேர்மனி தயக்கம் காட்டிவந்தது அனைவரும் அறிந்ததே.
நேட்டோ கூட்டாளிகளுடன் கைகோர்க்க மறுப்பு
இந்நிலையில், ரஷ்யாவுக்குள் தங்கள் ஆயுதங்களைக் கொண்டு தாக்குதல் நடத்த அமெரிக்காவும் பிரித்தானியாவும் உக்ரைனுக்கு அனுமதி வழங்கியுள்ள நிலையில், தங்கள் நிலைப்பாட்டிலிருந்து மாறப்போவதில்லை என ஜேர்மனி கூறிவிட்டது.
அத்துடன், நீண்ட தூரம் சென்று தாக்கும் ஏவுகணைகளை உக்ரைனுக்கு கொடுப்பதில்லை என்பதையும் மீண்டும் உறுதி செய்துள்ளார் ஜேர்மன் சேன்ஸலரான ஓலாஃப் ஷோல்ஸ்.
ரஷ்ய உக்ரைன் போரில் உக்ரைனுக்கு பெரும் ஆதரவு நாடுகளில் ஒன்றாக ஜேர்மனி அந்நாட்டுடன் நிற்கும் நிலையிலும், ஆயுதங்கள் வழங்கும் விடயத்தில் மட்டும் கவனமாக செயல்படுகிறது ஜேர்மனி.
பிரித்தானியாவும் அமெரிக்காவும் ரஷ்யாவைத் தாக்க உக்ரைனுக்கு அனுமதி வழங்கியுள்ள விடயம் குறித்தும், அது தொடர்பில் ஜேர்மனியின் நிலைப்பாடு என்ன என்றும் ஊடகவியலாளர்கள் ஷோல்ஸிடம் கேள்வி எழுப்பினார்கள்.
அதற்கு பதிலளித்த ஷோல்ஸ், நீண்ட தூரம் சென்று தாக்கும் ஏவுகணைகளை உக்ரைனுக்கு கொடுப்பதில்லை என்னும் ஜேர்மனியின் நிலைப்பாட்டில் எந்த மாற்றமும் இல்லை என்று கூறிவிட்டார்.
ரஷ்யாவுக்குள் சென்று தாக்கும் ஏவுகணைகளை உக்ரைனுக்கு வழங்குவது, ரஷ்யாவுடன் நேரடி மோதலில் ஈடுபடுவதற்கு சமமாகிவிடும் என்னும் அச்சமே ஷோல்ஸின் இந்த முடிவுக்குக்குக் காரணம் என நிபுணர்கள் கருதுகிறார்கள்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |