13 ஆண்டுகளுக்குப் பிறகு அரபு நாடொன்றில் தூதரகத்தை திறந்த ஜேர்மனி
சிரியாவில் 13 ஆண்டுகளுக்குப் பிறகு, ஜேர்மனி தனது தூதரகத்தை மீண்டும் திறந்துள்ளது.
தம்மாஸ்கஸில், ஜேர்மனி வெளிவிவகார அமைச்சர் அன்னலீனா பேர்பாக் (Annalena Baerbock) இன்று (வியாழக்கிழமை) தூதரகத்தை அதிகாரப்பூர்வமாக திறந்தார்.
இந்த தூதரகம், 2012-ல் உள்நாட்டுப் போரின் ஆரம்ப நாள்களில் மூடப்பட்ட தூதரகம் ஆகும்.
ஜேர்மனி ஐரோப்பிய ஒன்றியத்தின் முக்கிய நாடாக இருப்பதால், இந்த நடவடிக்கை முக்கியத்துவம் பெறுகிறது. இதற்கு முன்னதாக, இத்தாலி (2023) மற்றும் ஸ்பெயின் (2024) தூதரகங்களை திறந்துள்ளன.
"சிரியா மற்றும் ஐரோப்பா, ஜேர்மனி மற்றும் சிரியா இடையே ஒரு புதிய தொடக்கம் உருவாக வேண்டும். ஆனால் அது சுதந்திரம், பாதுகாப்பு, சமத்துவம் ஆகியவற்றுடன் இருக்க வேண்டும்." என சிரியாவிற்கு வருவதற்கு முன்பாகவே பேர்பாக் கூறினார்.
சமீபத்தில், முன்னாள் அதிபர் பஷார் அல்-அசாத் (Bashar Assad) பதவி நீக்கப்பட்ட பிறகு, அவருக்கு ஆதரவான படைகள் மற்றும் புதிய ஆட்சி படைகள் இடையே ஏற்பட்ட மோதல்களில் 1,000 பேர் உயிரிழந்தனர்.
இந்த இடைக்கால Ahmad al-Sharaa தலைமையிலான அரசாங்கம் குர்திஷ் ஆட்சி அதிகாரிகளுடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்துள்ளது. இதை பேர்பாக் வரவேற்று, "புதிய சிரியாவில் அனைவரும் இடம்பிடிக்க வேண்டும்" என்று கூறினார்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |