ரஷ்ய எரிவாயுவை முழுமையாக கைவிட்ட ஜேர்மனி: 60% எரிவாயு தேவையை பூர்த்தி செய்யும் பிரபல நாடு
ரஷ்யாவிடம் இருந்து பெற்று வந்த எரிவாயு தேவையை ஜேர்மனி தற்போது முற்றிலுமாக புறக்கணித்துள்ளது.
ரஷ்ய எரிவாயு
உக்ரைன் ரஷ்யா போரை தொடர்ந்து அமெரிக்கா உள்ளிட்ட பல்வேறு மேற்கத்திய நாடுகளும் ரஷ்யாவிற்கு எதிரான அடுக்கடுக்கான பொருளாதார தடையை விதிக்க தொடங்கினர்.
இதன் விளைவாக ரஷ்யாவின் எரிவாயு பயன்பாட்டை மேற்கத்திய நாடுகள் பலவும் குறைக்க தொடங்கினர்.
Reuters
எரிவாயு விற்பனையில் உலக அளவில் ரஷ்யா முதன்மையான இடத்தில் இருக்கும் நிலையில், போருக்கு முன்னதாக ஜேர்மனியின் சுமார் 60 சதவீத எரிவாயு தேவையை ரஷ்ய எரிவாயு காஸ்ப்ரோம் பூர்த்தி செய்து வந்தது.
இதற்கிடையில் நோர்ட் ஸ்ட்ரீம் எரிவாயு குழாய் வெடிப்பு ஏற்பட்டதை தொடர்ந்து ஜேர்மனிக்கான கடந்த ஆண்டு எரிவாயு விநியோகம் நிறுத்தப்பட்டது.
Reuters
இந்நிலையில் ஜேர்மனி தற்போது தங்களுடைய 60 சதவீத எரிவாயு தேவையை நார்வேயிடம் இருந்து பூர்த்தி செய்ய தொடங்கி இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதன்மூலம் ரஷ்யாவிடம் இருந்து நிறைவு செய்து வந்த 60 சதவீத எரிவாயு தேவையை முழுமையாக தற்போது நார்வே எரிவாயு விநியோகம் மூலம் மாற்றியுள்ளது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |