ஜேர்மனியில் உக்ரைன் வீரர்கள் இருவருக்கு ரஷ்ய நாட்டவரால் நேர்ந்த துயரம்
உக்ரைன் வீரர்கள் இருவரை ஜேர்மனியில் வைத்து ரஷ்ய நாட்டவர் ஒருவர் கொலை செய்த வழக்கு, ஜேர்மனியில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டுள்ளது.
உக்ரைன் வீரர்களைக் கொன்ற ரஷ்ய நாட்டவர்
உக்ரைன் ரஷ்யப் போரில் காயம்பட்ட முறையே 23 மற்றும் 36 வயதுடைய உக்ரைன் வீரர்கள், ஜேர்மனியின் பவேரியா மாகாணத்திலுள்ள Murnau என்னுமிடத்திலுள்ள மறுவாழ்வு மையம் ஒன்றில் சிகிச்சை பெற்றுவந்தார்கள்.
அப்போது, 58 வயதான ரஷ்ய நாட்டவர் ஒருவர் அந்த இரண்டு உக்ரைன் வீரர்களையும் கத்தியால் குத்தியதாக குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டுள்ளது.
இந்த கொடூர தாக்குதலில், சிகிச்சைக்கு வந்த அந்த உக்ரைன் வீரர்கள் இருவரும் கொல்லப்பட்டுவிட்டார்கள்.
விடயம் என்னவென்றால், அந்த மூன்று பேரும் ஒருவருக்கொருவர் அறிமுகமானவர்கள்தான்.
மதுபான விடுதி ஒன்றில் மது அருந்திக்கொண்டிருக்கும்போது, உக்ரைனை ரஷ்யா ஊடுருவியது தொடர்பாக அவர்களுக்குள் விவாதம் எழ, விவாதம் சண்டையாகி, அந்த ரஷ்ய நாட்டவர் அந்த உக்ரைன் வீரர்கள் இருவரையும் கத்தியால் குத்திவிட்டார். அவர்கள் இருவரும் உயிரிழந்தும் விட்டார்கள்.
பின்னர், நடந்த துயரத்திற்காக அவர் வருத்தம் தெரிவித்தது வேறு கதை!
அந்த வழக்கு நேற்று Munich நகரில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டுள்ளது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |