புறப்படுங்கள்... புலம்பெயர்ந்தோருக்கு விமான டிக்கெட்கள் அனுப்பும் ஜேர்மன் கட்சி
ஜேர்மனியில் புலம்பெயர்தல் எதிர்ப்புக்கு பெயர் பெற்ற வலதுசாரிக் கட்சி ஒன்று, புலம்பெயர்ந்தோரை நையாண்டி செய்யும் விதத்தில் அவர்களுக்கு போலியான விமான டிக்கெட்களை அனுப்பிவருகிறது.
புறப்படுங்கள்... புலம்பெயர்ந்தோருக்கு விமான டிக்கெட்கள்
ஜேர்மனியில் வாழும் புலம்பெயர்ந்தோர், அவர்கள் ஜேர்மன் குடியுரிமை பெற்றவர்களாக இருந்தால் கூட, அவர்கள் அனைவரையும் நாட்டை விட்டு வெளியேற்ற கங்கணம் கட்டிக்கொண்டிருக்கிறது வலதுசாரிக் கட்சியான Alternative for Germany (AfD) கட்சி.
இந்நிலையில், புலம்பெயர்ந்தோரை கேலி செய்யும் வகையில், அல்லது மறைமுகமாக மிரட்டும் வகையில், புலம்பெயர்ந்தோருக்கு போலி விமான டிக்கெட்களை அனுப்பி வருகிறது அக்கட்சி.
நாடுகடத்தல் டிக்கெட்கள் என பெயரிடப்பட்டுள்ள அந்த டிக்கெட்களில், பயணியின் பெயர் இருக்கவேண்டிய இடத்தில் ’சட்டவிரோத புலம்பெயர்ந்தோர்’ என்றும், செல்லவேண்டிய நாட்டின் பெயர் இருக்கவேண்டிய இடத்தில், ’பாதுகாப்பான சொந்த நாடு’ என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.
🇩🇪 In Germany, the far-right AfD party distributed brochures designed as return tickets to immigrants’ home countries. pic.twitter.com/eM2EOiAKUD
— Update NEWS (@UpdateNews724) January 14, 2025
கடந்த சில நாட்களாக தங்களுக்கு அத்தகைய டிக்கெட்கள் தபாலில் வந்துள்ளதாக சமூக ஊடகங்களில் புலம்பெயர்ந்தோர் பலர் தெரிவித்துள்ள நிலையில், அத்தகைய டிக்கெட்களை தாங்கள் வெளிநாட்டவர்களுக்கு அனுப்பவில்லை என மறுப்பு தெரிவித்துள்ள AfD கட்சி, எங்கள் கோரிக்கைகளை தெரிவிப்பதற்காக, சட்டப்படி தாங்கள் பெரிய அளவில் துண்டுப் பிரதிகளை வெளியிடுவதாக தெரிவித்துள்ளது.
இந்நிலையில், வெறுப்பைத் தூண்டும் வகையிலான இந்த நடவடிக்கை தொடர்பில் பொலிசார் விசாரணை ஒன்றைத் துவக்கியுள்ளதாக பொலிஸ் செய்தித்தொடர்பாளர் ஒருவர் தெரிவித்துள்ளார்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |