இஸ்ரேலுக்கு தடையென்றால் ஜேர்மனி பங்கேற்காது: கலாச்சாரத்துறை அமைச்சர்
யூரோவிஷன் பாடல் போட்டியில் இஸ்ரேல் விலக்கப்பட்டால், ஜேர்மனி பங்கேற்காது என்று கலாச்சாரத்துறை அமைச்சர் வுல்ஃப்ராம் வீமர் தெரிவித்துள்ளார்.
ஐரோப்பிய ஒளிபரப்பு ஒன்றியம்
உலகளவில் மில்லியன் கணக்கான பார்வையாளர்களை ஈர்க்கும் பாடல் போட்டி யூரோவிஷன் (Eurovision).
இந்தப் போட்டியானது 1956ஆம் ஆண்டு தொடங்கி நடைபெற்று வருகிறது. 
இது சுமார் 160 மில்லியன் பார்வையாளர்களை சென்றடைகிறது என ஐரோப்பிய ஒளிபரப்பு ஒன்றியம் (EBU) தெரிவித்துள்ளது.
இந்த முறை நடைபெற உள்ள போட்டியில் காஸா போர் காரணமாக இஸ்ரேல் பங்கேற்க எதிர்ப்பலை கிளம்பியுள்ளது.
அதாவது இஸ்ரேல் பங்கேற்றால் நாங்கள் வெளியேறுவோம் என சில நாடுகள் அச்சுறுத்துகின்றன. இதன் காரணமாக இஸ்ரேல் தொடர்பாக யூரோவிஷன் நெருக்கடி கூட்டத்தை நடத்துகிறது.
அடுத்த ஆண்டு இஸ்ரேல் போட்டியிட முடியுமா என்பதைப் பற்றி விவாதிக்க வியாழக்கிழமை இந்த கூட்டம் ஜெனீவாவில் நடைபெறுகிறது.
ஜேர்மனி பங்கேற்காது
இந்த நிலையில், இஸ்ரேல் விலக்கப்பட்டால் யூரோவிஷனில் ஜேர்மனி பங்கேற்காது என அதன் கலாச்சாரத் துறை அமைச்சர் வுல்ஃப்ராம் வீமர் (Wolfram Weimer) தெரிவித்துள்ளார்.
இஸ்ரேல் யூரோவிஷன் பாடல் போட்டியில் சேர்ந்தது என்றும், இஸ்ரேல் இல்லாமல் அந்த போட்டி இருக்கக் கூடாது என்றும் தெரிவித்தார்.
இதற்கிடையில், EBU மற்றும் ESC (Eurovision Song Contest)யின் மதிப்புகளுக்கு இசைவான ஆக்கப்பூர்வமான விவாதங்கள் மற்றும் தீர்வுகளை ஒன்றியத்திற்குள் நாங்கள் எதிர்பார்க்கிறோம் என ஜேர்மனியின் ஒளிபரப்பாளரான ARDயின் செய்தித் தொடர்பாளர் கூறியுள்ளார். 
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |