ஜேர்மனியின் பல பகுதிகளுக்கு கரும் பனி எச்சரிக்கை: பள்ளிகளுக்கு விடுமுறை
ஜேர்மனியின் பல பகுதிகளுக்கு கரும் பனி எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ள நிலையில், பல இடங்களில் பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.
கரும் பனி எச்சரிக்கை
இந்த கரும் பனி என்பது சாலையின் மீது ஒரு மெல்லிய பூச்சு போல பனி உறைந்திருப்பதைக் குறிக்கும்.

ஒரு மெல்லிய ஒளிபுகும் அடுக்காக பனி உறைந்திருப்பதால், சாதாரணமாகப் பார்த்தால் சாலையில் பனி இருப்பது போலவே தெரியாது. அதில் காலை வைத்தால் சறுக்கிவிடும், வாகனங்களை இயக்கினால் விபத்துக்கள் ஏற்படும்.
ஜேர்மன் வானிலை ஆராய்ச்சி மையம் ஜேர்மனியின் பல பகுதிகளுக்கு இந்த கரும் பனி தொடர்பில் எச்சரிக்கை விடுத்துள்ளது.
வாகனங்கள் வைத்திருப்போர், வாகனங்களை எடுக்காமல் இருப்பதே நல்லது என்றும் வானிலை ஆராய்ச்சி மையம் அறிவுறுத்தியுள்ளது.
மேலும், நாட்டின் பல பகுதிகளில் பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. அத்துடன், பிராங்பர்ட் விமான நிலையத்தில் பனி காரணமாக சுமார் 100 விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் |