டி20 கிரிக்கெட்டில் 308 ரன் குவித்த அறிமுக அணி
ஆஸ்திரியா அணிக்கு எதிரான டி20 போட்டியில் ஜேர்மனி அணி 308 ஓட்டங்கள் குவித்தது.
முஸாத்திக் அகமது, பென் கோஹ்லர் சதம்
ஆஸ்திரியா அணி ஜேர்மனிக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு விளையாடி வருகிறது. இரு அணிகளுக்கும் இடையிலான முதல் டி20 போட்டி நேற்று நடந்தது.
முதலில் ஆடிய ஜேர்மனி அணியில் கேப்டன் முஸாத்திக் அகமது 48 பந்துகளில் 122 ஓட்டங்கள் (10 சிக்ஸர்கள், 11 பவுண்டரிகள்) விளாசி அவுட் ஆனார். அடுத்து ஷாஹித் அப்ரிடி களமிறங்க, பென் கோஹ்லர் கேட்மோர் ருத்ரதாண்டவம் ஆடினார்.
இதன்மூலம் ஜேர்மனி அணி 20 ஓவர்களில் 308 ஓட்டங்கள் குவித்தது. பென் கோஹ்லர் கேட்மோர் (Ben Kohler-Cadmore) 58 பந்துகளில் 6 சிக்ஸர்கள், 17 பவுண்டரிகளுடன் 133 ஓட்டங்கள் குவித்தார். அப்ரிடி 34 (14) ஓட்டங்கள் எடுத்தார்.
இமாலய வெற்றி
பின்னர் ஆடிய ஆஸ்திரியா அணி 15.1 ஓவர்களில் 146 ஓட்டங்களுக்கு ஆல்அவுட் ஆனது. கரண்பிர் சிங் 39 பந்துகளில் 84 ஓட்டங்கள் (8 சிக்ஸர்கள், 7 பவுண்டரிகள்) விளாசினார்.
ஜேர்மனி அணி 162 ஓட்டங்கள் வித்தியாசத்தில் இமாலய வெற்றி பெற்றது. ஷாஹித் அப்ரிடி 4 விக்கெட்டுகளும், குலான் ரசூல் மற்றும் முஸ்லீம் யார் அஷ்ரப் தலா 2 விக்கெட்டுகளும் வீழ்த்தினர்.

| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |