உஸ்மான், குசல் பெரேரா சரவெடி! 2 ரன்னில் வெற்றி வாகை சூடிய கிங்ஸ்மென்..நாளை இறுதிப்போட்டி
பாகிஸ்தான் சூப்பர் லீக் எலிமினேட்டர் 2 போட்டியில் ஐதராபாத் கிங்ஸ்மென் அணி வெற்றி பெற்றது.
உஸ்மான் கான் விளாசல்
லாகூரில் இஸ்லாமாபாத் யுனைடெட் மற்றும் ஐதராபாத் கிங்ஸ்மென் அணிகளுக்கு இடையிலான எலிமினேட்டர் 2 போட்டி நடந்தது.

முதலில் ஆடிய ஐதராபாத் கிங்ஸ்மென் அணி 5 விக்கெட்டுகள் இழப்பிற்கு 186 ஓட்டங்கள் குவித்தது.
உஸ்மான் கான் (Usman Khan) 30 பந்துகளில் 61 ஓட்டங்கள் (10 பவுண்டரிகள்) விளாசினார். லபுஷேன் 39 ஓட்டங்களும், சைம் அயூப் 38 ஓட்டங்களும் எடுத்தனர்.
குசல் பெரேரா அதிரடி
இலங்கையின் குசல் பெரேரா 21 பந்துகளில் 2 சிக்ஸர், 4 பவுண்டரிகளுடன் 37 ஓட்டங்கள் விளாசினார்.

பின்னர் ஆடிய இஸ்லாமாபாத் அணி 20 ஓவர்களில் 7 விக்கெட்டுகள் இழப்பிற்கு 184 ஓட்டங்கள் எடுத்ததால், 2 ஓட்டங்கள் வித்தியாசத்தில் கிங்ஸ்மென் வெற்றி பெற்றது.
மார்க் சாப்மேன் 26 பந்துகளில் 43 ஓட்டங்களும், ஹைதர் அலி 16 பந்துகளில் 31 ஓட்டங்களும், கான்வே 30 (25) ஓட்டங்களும் எடுத்தனர்.

மொஹம்மது அலி, ஹுனைன் ஷா தலா 2 விக்கெட்டுகளும், ஆகிப், ஹஸன் மற்றும் சைம் அயூப் தலா ஒரு விக்கெட்டும் கைப்பற்றினர்.
இந்த வெற்றியின் மூலம் ஐதராபாத் கிங்ஸ்மென் அணி இறுதிப்போட்டிக்கு முன்னேறி, நாளை பெஷாவர் ஜல்மி அணியை எதிர்கொள்ள உள்ளது.

| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |