ரஷ்யாவுக்கு ஏற்றுமதியைக் குறைத்து வேறொரு நாட்டிடமிருந்து அதிக இறக்குமதி செய்யும் ஜேர்மனி: அந்த நாடு எது தெரியுமா?
ரஷ்யா உக்ரைனை ஊடுருவியதைத் தொடர்ந்து, ஜேர்மனி அந்நாட்டிற்கு பொருட்கள் ஏற்றுமதி செய்வதைக் குறைத்தாலும், அந்நாட்டிடமிருந்து இறக்குமதி செய்வதைக் குறைக்கவில்லை.
அத்துடன், மற்றொரு நாட்டிலிருந்தும் ஏராளமான பொருட்களை இறக்குமதி செய்துவருகிறது ஜேர்மனி.
அந்த நாடு, சீனா!
இன்று பெடரல் புள்ளியியல் அலுவலகம் வெளியிட்டுள்ள தகவல்களின்படி, ரஷ்ய ஏற்றுமதி பாதாளத்தை நோக்கி பாய்ந்திருக்கிறது.
2022 மார்ச் நிலவரப்படி ரஷ்யாவுக்கு ஜேர்மனியிலிருந்து செய்யப்பட்ட செய்யப்பட்ட ஏற்றுமதி, சுமார் 60 சதவிகிதம் குறைந்துள்ளது என்றும், ஏப்ரலிலோ, அது 64.1 சதவிகிதம் குறைந்துள்ளது என்றும் பொருளாதாரவியல் நிபுணர்கள் கண்டறிந்துள்ளார்கள்.
அதே நேரத்தில், 2022இல் கோவிட் சூழலின் மத்தியிலும், சீனாவுக்கும் ஜேர்மனிக்குமான வர்த்தகம் சிறிதும் பாதிக்கப்படவில்லை. ஏப்ரல் 2022 நிலவரப்படி, சீனாவிலிருந்து ஜேர்மனி இறக்குமதி செய்த பொருட்களின் அளவு 52.8 சதவிகிதம் அளவுக்கு அதிகரித்துள்ளது.
சீனாவுக்கு ஜேர்மனி ஏற்றுமதி செய்யும் பொருட்களின் அளவும் 1.5 சதவிகிதம்தான் குறைந்துள்ளது.
சொல்லப்போனால், ஜேர்மனி வரலாறு காணாத வகையில், 2022 ஏப்ரலில், கூடுதலாக 8.4 பில்லியன் யூரோக்கள் அளவுக்கு சீனாவுடன் இறக்குமதி வர்த்தகம் செய்துள்ளது. அதாவது, சீனாவுக்கு ஜேர்மனி ஏற்றுமதி செய்த பொருட்களைவிட, அது சீனாவிலிருந்து இறக்குமதி செய்த பொருட்களின் மதிப்பு அதிகம் என்பது குறிப்பிடத்தக்கது.