ஹார்முஸ் பாதுகாப்பு: கண்ணிவெடிகளை அகற்றும் கப்பல்களை அனுப்பும் ஜேர்மனி
ஜேர்மன் கடற்படை கப்பல்களை மத்தியதரைக் கடலுக்கு அனுப்ப உள்ளதாக ஜேர்மனி பாதுகாப்புத் துறை அமைச்சர் போரிஸ் பிஸ்டோரியஸ் அறிவித்துள்ளார்.
ஹார்முஸ் நீரிணையில் சர்வதேச வர்த்தகக் கப்பல்களை பாதுகாக்கும் நடவடிக்கையில் ஜேர்மனி பங்கேற்கத் தயாராக இருப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
முக்கியமாக கடல் கண்ணிவெடிகளை அகற்றும் கப்பல்கள் படையில் இருக்குமென தெரிவிக்கப்பட்டுள்ளது. இருப்பினும் கப்பல்கள் எப்போது புறப்படும் என எந்த தகவலும் இல்லை.
பிஸ்டோரியஸ், “Bundestag (ஜேர்மன் நாடாளுமன்றம்) அனுமதி கிடைத்தவுடன் ஹார்முஸ் நீரிணை பாதுகாப்பு நடவடிக்கைகளில் பங்கேற்க கப்பல்கள் தயாராக இருக்க வேண்டும். அதற்காகவே சில கப்பல்களை முன்கூட்டியே மத்தியதரைக் கடலுக்கு அனுப்புகிறோம்” என்று கூறியுள்ளார்.

இந்த நடவடிக்கை, 2024-ல் ஹவுதி தாக்குதல்களுக்கு எதிராக யூரோப்பிய ஒன்றியம் தொடங்கிய Aspides கடற்படை நடவடிக்கையைப் போலவே வேகமாக முன்னெடுக்கப்பட உள்ளது.
ஜேர்மனி, அமெரிக்கா தலைமையிலான போரில் பங்கேற்கவில்லை என்றாலும், ஹார்முஸ் நீரிணையைப் பாதுகாக்க கண்ணிவெடிகளை நீக்குதல் மற்றும் கண்காணிப்பு நடவடிக்கைகளில் பங்களிக்க உறுதியளித்துள்ளது.
உலகின் எண்ணெய் மற்றும் எரிவாயு போக்குவரத்தின் ஐந்தில் ஒரு பங்கு ஹார்முஸ் நீரிணை வழியாக நடக்கிறது.
சமீபத்திய போரினால் இந்த ஹார்முஸ் நீரிணை இரண்டு மாதங்களுக்கு மூடப்பட்டதால் உலக பொருளாதாரத்தில் பெரும் தாக்கம் ஏற்பட்டது. அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் தாக்குதல்களுக்கு பதிலாக ஈரான் ஹார்முஸ் நீரிணையை முடக்கியது.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |