சேன்சலர் தலைமையில் தேசிய பாதுகாப்பு கவுன்சிலை உருவாக்கவிருக்கும் ஜேர்மனி
ஜேர்மனியும் இப்போது உலகில் பல நாடுகளைப் போல தேசிய பாதுகாப்பு கவுன்சிலை (NSR) உருவாக்க திட்டமிட்டுள்ளது.
பாதுகாப்பு கவுன்சிலை உருவாக்குவதன் மூலம், ஜேர்மன் அரசு நெருக்கடியான சூழ்நிலைகளில் விரைவாகவும் தீர்மானமாகவும் செயல்பட முடியும்.
பாதுகாப்பு தொடர்பான முடிவுகள் மெதுவாக எடுக்கப்படுவதால், NSR மூலம் அதனை விரைவுபடுத்த ஜேர்மனி முயற்சிக்கிறது.
NSR கவுன்சில் பாதுகாப்பு தொடர்பான அனைத்து தகவல்களையும் ஒரே இடத்தில் சேகரித்து விரைவாக முடிவெடுக்க உதவும்.
விமான கட்டத்தல், தாக்குதல் போன்ற நெருக்கடியான சூழ்நிலைகளுக்கான திட்டங்களை NSR உருவாக்கும்.
NSR கவுன்சில் ஜேர்மன் சேன்சலர் Friedrich Merz தலைமையில் இயங்கும். வெளிவிவகார, உள்துறை, நிதி, பொருளாதார, நீதித்துறை உள்ளிட்ட அமைச்சர்கள் இந்த கவுன்சிலில் நிரந்தர உறுப்பினர்களாக இருப்பார்கள்.
தேவைப்பட்டால் மாநில பிரதிநிதிகள், NATO, ஐரோப்பிய ஒன்றியம், தனியார் வல்லுநர்கள் மற்றும் பாதுகாப்பு நிறுவனங்களின் பிரதிநிதிகளும் உறுப்பினர்களாக சேர்க்கப்படலாம்.
இந்த NSR அமைப்பு ஜேர்மனியின் பாதுகாப்பு மற்றும் வெளிநாட்டு கொள்கைகளில் முக்கிய மாற்றத்தை ஏற்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |
Germany National Security Council, German NSR 2025, Friedrich Merz security policy, NSR Germany, Germany NSR Council