உக்ரைன் அகதிகளுக்காக ரூ.2.45 லட்சம் கோடி ஒதுக்கியுள்ள ஐரோப்பிய நாடு
உக்ரைன் அகதிகளுக்கு செலவழிக்க ரூ.2.45 லட்சம் கோடி வரையிலான நிதியை ஐரோப்பிய பெரும் பொருளாதாரமான ஜேர்மனி ஒத்துக்கியுள்ளது.
உக்ரைனில் போரின் தொடக்கத்திலிருந்து அகதிகளாக ஜேர்மனிக்கு வந்தவர்களை ஆதரிக்க ஜேர்மன் அரசு 7-8 பில்லியன் யூரோ வரை ஒதுக்கியுள்ளது.
இது இலங்கை பிணமதிப்பில் சுமார் ரூ.2,45,178 கோடி ஆகும்.
இதை ஜேர்மன் சேன்சலர் ஒலாஃப் ஷோல்ஸ் (Olaf Scholz), ஐரோப்பிய கவுன்சில் கூட்டத்தின் முடிவுகள் குறித்து செய்தியாளர்களிடம் கருத்து தெரிவிக்கும்போது கூறினார்.
முக்கிய விபரங்கள்
ஜேர்மனியில் உள்ள 10 இலட்சத்துக்கும் மேற்பட்ட உக்ரைன் அகதிகளை ஆதரிக்க இந்த நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.
அதனைத் தொடர்ந்து, ஜேர்மனி உக்ரைனுக்கு €28 பில்லியன் மதிப்புள்ள ஆயுதங்களை வழங்கியுள்ளதாகவும், இன்னும் சில ஆயுதங்கள் விரைவில் வழங்கப்பட உள்ளதாக ஷோல்ஸ் குறிப்பிட்டார்.
அவரது அறிவிப்பில், புதிய IRIS-T வான் பாதுகாப்பு அமைப்பு மற்றும் கூடுதலான Gepard systems-களை உக்ரைனுக்கு விரைவில் அனுப்பப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
உக்ரைனுக்கான ஜேர்மனியின் மொத்த செலவு இதுவரை 37 பில்லியன் யூரோ வரை எட்டியுள்ளது. மேலும், ஐரோப்பிய ஒன்றியத்தின் மூலம் கூடுதல் நிதியுதவிகளை உக்ரைனுக்கு வழங்குகிறது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |
Germany spends up to EUR 8B supporting Ukrainian refugees, German Chancellor Olaf Scholz, Germany Support Ukraine, germany Ukraine