லேசர் மூலம் குறிவைக்கப்பட்ட ஜேர்மன் ராணுவ விமானம்: சீன தூதருக்கு சம்மன்
ஜேர்மன் ராணுவ விமானம் ஒன்றை சீன கப்பல் ஒன்று லேசர் மூலம் குறிவைத்ததைத் தொடர்ந்து, சீன தூதருக்கு ஜேர்மனி சம்மன் அனுப்பியுள்ளது.
சீன தூதருக்கு சம்மன்
செங்கடலில் ஹவுதிக்கள் கப்பல்கள் மீது தாக்குதல் நடத்துவதை தடுப்பதற்காக ஐரோப்பிய ஒன்றியம் போர் விமானங்கள் மூலம் கண்காணிப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டுவருகிறது.
இந்நிலையில், கண்காணிப்புப் பணியில் ஈடுபட்டிருந்த ஜேர்மன் போர் விமானம் ஒன்றின் மீது, சீனாவுக்கு சொந்தமான கப்பல் ஒன்றிலிருந்து லேசர் ஒளி பாய்ச்சப்பட்டுள்ளது.
அதனால் தனது கண்காணிப்புப் பணியை தொடரமுடியாமல் அந்த விமானம் விமான தளத்துக்கே திரும்பியுள்ளது.
அதைத் தொடர்ந்து, ராணுவ விமானம் ஒன்றிற்கு அபாயத்தை ஏற்படுத்தியதாக குற்றச்சாட்டு முன்வைத்து சீன தூதருக்கு ஜேர்மனி சம்மன் அனுப்பியுள்ளது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |