பெருவெள்ளத்தால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ள நாடு: ஜேர்மனி தெரிவித்துள்ள தகவல்
பெருவெள்ளதால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ள ஸ்பெயின் நாட்டுக்கு உதவ முடிவு செய்துள்ளதாக தெரிவித்துள்ளது ஜேர்மனி.
கடுமையாக பாதிக்கப்பட்டுள்ள ஸ்பெயின்
ஸ்பெயின் நாட்டில் பெய்த பலத்த மழையைத் தொடர்ந்து, பெருவெள்ளத்தில் சிக்கி அந்நாட்டின் Valencia பகுதியில் மட்டுமே, குறைந்தது 95 பேர் வரை பலியாகியுள்ளனர்.
இந்நிலையில், இந்த செய்தி அறிந்து ஜேர்மன் சேன்ஸலரும் பெடரல் அரசும் கடும் அதிர்ச்சிக்குள்ளாகியுள்ளதாக ஜேர்மன் அரசின் செய்தித்தொடர்பாளரான Steffen Hebestreit தெரிவித்துள்ளார்.
ஆகவே, ஜேர்மனி அரசு ஸ்பெயின் நாட்டுக்கு உதவ முடிவு செய்துள்ளது.
மோசமான பேரழிவைச் சந்தித்துள்ள ஸ்பெயினுக்கு ஜேர்மனியின் உதவிக்குழுக்களின் உதவி தேவையா என்பதை அறிவதற்காக ஸ்பெயின் அரசுடன் நேரடித் தொடர்பிலிருப்பதாக ஜேர்மன் அரசின் செய்தித்தொடர்பாளரான Steffen Hebestreit தெரிவித்துள்ளார்.
அத்துடன், நமது அனுபவம் மிக்க பேரிடர் மேலாண்மை குழுக்கள் மற்றும் நிபுணர்கள் மூலம் ஸ்பெயினுக்கு உதவ முடியுமானால், நாம் உதவி செய்யத் தயார் என்று கூறியுள்ளார் உள்துறை அமைச்சரான நான்ஸி ஃபேஸர்.
நமது ஸ்பெயின் நாட்டு நண்பர்களுக்கு ஆறுதலைத் தெரிவித்துக்கொள்கிறோம் என்று கூறிய அவர், தேவை ஏற்பட்டுள்ள இந்த நேரத்தில் ஐரோப்பாவே அவர்களுடன் ஒன்றிணைந்து நிற்கிறது என்றும் கூறியுள்ளார்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |