ஜேர்மனியில் பொதுத்தேர்தல் நெருங்கிவரும் நேரத்தில் முக்கிய நபர் ராஜினாமா
ஜேர்மனியில் பொதுத்தேர்தலுக்கு இன்னும் ஒரு ஆண்டு மட்டுமே இருக்கும் நிலையில், ஆளுங்கட்சியின் பொதுச்செயலர் ராஜினாமா செய்ய இருப்பதாக அறிவித்துள்ளார்.
முக்கிய நபர் ராஜினாமா
ஜேர்மனியில் ஆளும் ஓலாஃப் ஷோல்ஸின் Social Democrat கட்சியின் பொதுச் செயலரான Kevin Kühnert தனது கட்சிப்பொறுப்பிலிருந்து ராஜினாமா செய்ய இருப்பதாக அறிவித்துள்ளார்.
Image: Michael Kappeler/picture alliance/dpa
அத்துடன், இனி தேர்தலில் போட்டியிடப்போவதில்லை என்றும் அவர் அறிவித்துள்ளார்.
தனது கட்சியினருக்கு அவர் எழுதியுள்ள கடிதம் ஒன்றில், தனக்கு உடல் நலம் சரியில்லை என்றும், தேர்தல் வெற்றிக்கு முழுக் கட்சியின் முழுமையான அர்ப்பணிப்பும் தேவை என்றும் அவர் கூறியுள்ளார்.
சமீபத்திய கருத்துக்கணிப்புகள், கட்சிக்கு ஆதரவு குறைந்துள்ளதைக் காட்டுவதாகவும், அதை சரி செய்ய கடுமையான முயற்சி தேவை என்றும் அவர் கூறியுள்ளார்.
தன்னால் அதைச் செய்ய இயலாத உடல் நிலையில் இருப்பதாகவும், அதனால்தான் தான் ராஜினாமா செய்ய முடிவு செய்துள்ளதாகவும் Kevin தெரிவித்துள்ளார்.
ஏற்கனவே கிரீன்ஸ் கட்சி தலைவர்கள் இருவர் ராஜினாமா செய்துள்ளதைத் தொடர்ந்து கட்சி கடினமான சூழலைக் கடந்து செல்லும் நிலையில், தேர்தல் நெருங்கிவரும் நேரத்தில் Kevin ராஜினாமா செய்துள்ளது ஓலாஃப் ஷோல்ஸ் அரசுக்கு மேலும் நெருக்கடியை ஏற்படுத்துவதாக அமைந்துள்ளது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |