இனி இவர்களுக்கு ஜேர்மன் விசா கிடையாது: ஜேர்மன் அரசு முடிவு
ரஷ்யா உக்ரைனை ஊடுருவியதைத் தொடர்ந்து, ரஷ்யப் போரை எதிர்க்கும் ரஷ்யர்கள் பலர் ரஷ்யாவிலிருந்து தப்பி வெளியேறிவருகிறார்கள்.
அவர்களுக்காக, Ark project என்னும் திட்டத்தின்கீழ் ஜேர்மன் அரசு மனிதநேய விசாக்களை வழங்கிவந்தது.
இனி அவர்களுக்கு ஜேர்மன் விசா கிடையாது
ஆனால், இனி அப்படி ரஷ்யாவிலிருந்து தப்பி வரும் ரஷ்யர்களுக்கு மனிதநேய விசாக்கள் கிடையாது.
ஆம், மனிதநேய விசாக்கள் வழங்குவதை ஜேர்மன் வெளியுறவு அமைச்சகம் நிறுத்திவிட்டது.
ரஷ்ய ஊடகவியலாளர்கள், சமூக ஆர்வலர்கள், அரசியல்வாதிகள் என சுமார் 300 அந்த விசாவுக்கு விண்ணப்பித்துவிட்டு காத்திருக்கும் நிலையில், மனிதநேய விசாக்கள் வழங்குவதை ஜேர்மன் வெளியுறவு அமைச்சகம் நிறுத்திவிட்டதால் அவர்கள் அனைவரும் என்ன செய்வதென்று தெரியாமல் திகைத்துப்போயிருக்கிறார்கள்.
ஜேர்மனியில் புதிய அரசு ஆட்சி அமைத்ததைத் தொடர்ந்து, புலம்பெயர்தல் கொள்கைகளைக் கட்டுப்படுத்துவதாகக் கூறி, மனிதநேய விசாக்கள் வழங்கும் திட்டத்தை அரசு நிறுத்திவிட்டது குறிப்பிடத்தக்கது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |