சுவிஸ், ஜேர்மனி, கனடா செல்ல தடை! சிவப்பு பட்டியலை விரிவாக்கும் பிரபல நாடு
சுவிஸ், ஜேர்மனி, கனடா உள்ளிட்ட மேலும் 10 நாடுகளுக்கு இஸ்ரேல் அரசாங்கம் விமான சேவையை தடை செய்யவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
கோவிட் தொற்று எண்ணிக்கை அதிகரித்து வருவதன் காரணமாகவும், Omicron பரவலைக் கட்டுப்படுத்தும் விதமாகவும், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, இஸ்ரேல் அதன் சிகப்பு பட்டியலில் சேர்க்க, 10 புதிய நாடுகளைச் சேர்க்க பரிந்துரைக்கப்பட்டுள்ளதாக அந்நாட்டின் சுகாதார அமைச்சகம் ஞாயிற்றுக்கிழமை தெரிவித்தது.
அந்த வகையில், இஸ்ரேலில் டிசம்பர் 22 புதன்கிழமை முதல் அமெரிக்கா, இத்தாலி, ஜேர்மனி, பெல்ஜியம், ஹங்கேரி, கனடா, மொராக்கோ, போர்ச்சுகல், சுவிட்சர்லாந்து மற்றும் துருக்கி ஆகிய நாடுகளுக்கான பயணத்தைத் தடை செய்வதற்கான பரிந்துரைக்கு அமைச்சர்கள் ஒப்புதல் அளிப்பார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
கடந்த 3 வாரங்களில் தொற்று எண்ணிக்கை பயங்கரமாக அதிகரித்திருப்பதை கண்ட இஸ்ரேல் பிரதம மந்திரி நஃப்தாலி பென்னட் இந்த முடிவைஎடுத்துள்ளார்.
இஸ்ரேல் சமீபத்தில் இங்கிலாந்து, டென்மார்க், பிரான்ஸ், ஸ்பெயின், ஐக்கிய அரபு அமீரகம், அயர்லாந்து, நார்வே, பின்லாந்து மற்றும் ஸ்வீடன் ஆகிய 9 நாடுகளை அதன் "சிவப்பு" பட்டியலில் சேர்த்தது.
இந்த பட்டியலில் தென்னாப்பிரிக்காவும் பிற ஆப்பிரிக்க நாடுகளும் டிசம்பர் தொடக்கத்திலேயே சேர்க்கப்பட்டன.