பிரித்தானியாவுக்காக புலம்பெயர்தல் சட்டங்களை கடினமாக்கும் ஜேர்மனி
புலம்பெயர்தலைக் கட்டுப்படுத்தும் முயற்சியில், பிரித்தானியாவுக்காக ஜேர்மனியும் நடவடிக்கைகள் எடுக்க முடிவு செய்துள்ளது.
பிரித்தானியாவுக்காக ஜேர்மனி எடுக்கும் நடவடிக்கைகள்
பிரான்சிலிருந்து ஆங்கிலக்கால்வாயைக் கடந்து பிரித்தானியாவுக்குள் நுழையும் புலம்பெயர்வோரைக் கட்டுப்படுத்த பிரான்ஸ் சில நடவடிக்கைகளை எடுக்க உறுதி அளித்துள்ளது.
இந்நிலையில், ஜேர்மனியும் பிரித்தானியாவுக்காக சில முக்கிய நடவடிக்கைகளை எடுக்க முடிவு செய்துள்ளது.
அதாவது, பிரித்தானியாவுக்குள் நுழையும் புலம்பெயர்வோர் பயணிக்கும் சிறுபடகுகள், ஜேர்மனியிலுள்ள சேமிப்பகங்களில்தான் பதுக்கிவைக்கப்பட்டுள்ளன.
ஆக, ஜேர்மன் அதிகாரிகள், அந்த சேமிப்பகங்களில் ஆய்வு மேற்கொண்டு தக்க நடவடிக்கை எடுக்க இருக்கிறார்கள்.
இப்போதைக்கு அப்படி நடவடிக்கை எடுக்கும் வகையிலான சட்டங்கள் ஜேர்மனியில் இல்லை. ஆகவே, பிரித்தானியாவுக்குள் சட்டவிரோத புலம்பெயர்தலை ஊக்குவிக்கும் வகையில் ஜேர்மனியில் நடக்கும் விடயங்களைக் கட்டுப்படுத்தும் வகையில் ஜேர்மனி சட்டங்களைக் கடினமாக்க உள்ளது.
இந்நிலையில், ஜேர்மன் சேன்சலரான பிரெட்ரிக் மெர்ஸ் நாளை பிரித்தானியாவுக்கு அரசு முறைப்பயணமாக வருகிறார்.
அப்போது, புலம்பெயர்தல், தொழில் மற்றும் பாதுகாப்பு தொடர்பிலான ஒப்பந்தம் ஒன்றில் பிரித்தானியாவும் ஜேர்மனியும் கையெழுத்திட உள்ளது குறிப்பிடத்தக்கது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |