ஜூலை மாதம் 1ஆம் திகதி முதல்... ஜேர்மன் விசா தொடர்பில் ஒரு முக்கிய செய்தி
ஜேர்மனி அரசு, ஜூலை மாதம் 1ஆம் திகதி முதல், விசா தொடர்பில் ஒரு முக்கிய மாற்றத்தைக் கொண்டுவர உள்ளது.
ஜூலை மாதம் 1ஆம் திகதி முதல்...
ஜூலை மாதம் 1ஆம் திகதி, ஜேர்மனியில் விசா தொடர்பிலான, remonstration procedure என்னும் நடைமுறை ஒழிக்கப்பட உள்ளது.
இந்த remonstration procedure என்பது என்னவென்றால், தற்போதைய நிலவரப்படி ஒருவரது ஜேர்மன் விசா விண்ணப்பம் நிராகரிக்கப்படுமானால், அவர் அதை எதிர்த்து ஃபெடரல் வெளியுறவு அலுவலக மறுபரிசீலனைக்கு கோரலாம். ஒரு மேல்முறையீடு போல என வைத்துக்கொள்ளலாம்.
ஆனால், ஜூலை மாதம் 1ஆம் திகதி இந்த நடைமுறை முடிவுக்கு வருகிறது.
ஆக, விசா விண்ணப்பம் நிராகரிக்கப்படுவோர், இனி, மீண்டும் புதிதாக விசாவுக்கு விண்ணப்பிக்கவேண்டும்.
விடயம் என்னவென்றால், விசா நிராகரிக்கப்பட்டவர்கள் மறுபரிசீனை கோருவதால், அதை மறுபரிசீலனை செய்ய நேரம் செலவாவதால், மொத்தத்தில் விசா வழங்கலுக்கு தாமதம் ஏற்படுவதாக கூறப்படுகிறது.
இந்த புதிய திட்டம் மூலம், அனைவருக்குமான காத்திருப்பு நேரம் குறையும் என்பதால், இது ஒரு நல்ல மாற்றம்தான் என்றும் கருதப்படுகிறது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |