இரண்டாம் உலகப் போரின்பொது நடந்த கொடூரம்., இழப்பீடு வழங்க ஜேர்மனிக்கு உத்தரவிட்ட நாடு
இரண்டாம் உலகப்போரில் படுகொலை செய்யப்பட்ட இத்தாலிய குடும்பங்களுக்கு ஜேர்மனி இழப்பீடு வழங்க உத்தரவிடப்பட்டுள்ளது.
இரண்டாம் உலகப் போரின் போது பியட்ரான்சியேரி கிராமத்தில் நாஜி படுகொலையில் கொல்லப்பட்டவர்களின் உறவினர்களுக்கு இழப்பீடாக ஜேர்மனி கூடுதலாக 4 மில்லியன் யூரோ (4.2 மில்லியன் டாலர்) வழங்க வேண்டும் என்று இத்தாலியில் உள்ள ஒரு நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
இந்த தீர்ப்பு மூலம் ஜேர்மனி வழங்கவேண்டிய மொத்த நஷ்ட ஈடு தொகை 15 மில்லியன் யூரோக்களாக உயர்ந்துள்ளது.
இதற்காக முன்பே நஷ்ட ஈடு பெறாத மேலும் 30 நபர்களின் கோரிக்கைகளை நீதிமன்றம் ஏற்றுக்கொண்டது.
1943 நவம்பர் 21-ஆம் திகதி, பியெட்ரான்சியேரி அருகிலுள்ள லிம்மாரி காடுகளில், நாசி படைகள் 128 ஆயுதமற்ற பொதுமக்களை படுகொலை செய்தன.
இதில் 60 பெண்கள், 34 குழந்தைகள் (10 வயதுக்குட்பட்டவர்கள்) மற்றும் பல முதியவர்கள் உள்ளனர்.
கிராம மக்கள் இத்தாலிய எதிர்ப்பு போராளிகளை ஆதரித்தனர் என்று நாசி படைகள் சந்தேகித்ததன் விளைவாக இந்த கொடூரம் நிகழ்ந்தது.
இந்த இழப்பீட்டு தொகை, கொவிட்-19 ஐ தீர்க்கவும், நாசி குற்றங்களுக்கான உரிய நிதி திட்டத்தின் கீழ் ஜேர்மனி மூலம் இத்தாலிக்கு வழங்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. இத்தாலிய நபர்கள் அந்த நிதி மூலம் நஷ்ட ஈடுகளை பெறுவார்கள்.
இந்த தீர்ப்பு, நாசி காலத்தில் நிகழ்ந்த கொடூரங்களுக்கு நீதி வழங்குவதற்கான ஒரு முக்கியமான முன்னேற்றமாகக் கருதப்படுகிறது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |
Germany Italy