சுற்றுலா பயணிகளை கவர்ந்திழுக்கும் ஜேர்மனி
ஐரோப்பாவில் அதிக மக்கள் தொகை கொண்ட நாடாகவும், உலகளவில் அதிக சுற்றுலாப்பயணிகளை ஈர்க்கும் நாடாகவும் விளங்குகிறது ஜேர்மனி.
இதன் வடக்கே வட கடல், டென்மார்க், பால்ட்டிக் கடல்; கிழக்கே போலந்து, செக் குடியரசு; தெற்கே ஆத்திரியா, சுவிட்சர்லாந்து; மேற்கே பிரான்சு, லக்சம்பேர்க், பெல்சியம், நெதர்லாந்து ஆகியன எல்லைகளாக உள்ளன.
இந்நாட்டின் கலாசாரம், சாகச விளையாட்டுகள் மற்றும் நகர, கிராமப்புற வாழ்க்கை என பன்முகம் கொண்ட ஜேர்மனிக்கு சுற்றுலா பயணிகள் படையெடுக்கின்றனர்.
எப்போதுமே சுற்றுலா தளங்களுக்கான பட்டியலில் முதல் ஐந்து இடங்களில் ஜேர்மனி இடம்பிடித்துவிடும்.
மற்ற ஐரோப்பிய நாடுகளை ஒப்பிடுகையில் இங்கு செலவும் குறைவு என்பதாலும் சுற்றுலா பட்டியலில் முக்கிய இடம்வகிக்கிறது.
இந்த பதிவில் ஜேர்மனியின் சுற்றுலா தளங்கள் பற்றி விரிவாக காணலாம்.
பெர்லின்
ஜேர்மனியின் தலைநகரமும், மிகப்பெரிய நகரமும் ஆகும், கிழக்கு ஜேர்மனி- மேற்கு ஜேர்மனியாக பிரிக்கப்பட்ட போது இருந்த பெர்லின் சுவரை இங்கு காணலாம்.
பெரிய திறந்தவெளிகள், பசுமையான பழைய இடைக்கால கட்டமைப்புகள், இரவு வாழ்க்கை என ஒட்டுமொத்த சந்தோஷ தருணங்களை அள்ளித்தருகிறது பெர்லின்.
இங்குள்ள அருங்காட்சியகத்தில் வரலாற்று நினைவுகள், போர் தொடர்பான நினைவுச்சின்னங்களை பார்க்கலாம்.
Europa Park
தென் மேற்கு ஜேர்மனியில் அமைந்துள்ளது Europa Park. பொழுதுபோக்கு பூங்காவான இங்கு சாகச பயணங்கள் நிச்சயம் புது அனுபவத்தை கொடுக்கும்.
ஜேர்மன் மொழி பேசும் நாடுகளிலேயே இது மிகப்பெரிய தீம் பார்க் ஆகும்.
Heidelberg City
ஜேர்மனியில் சுற்றுலா பயணிகள் குவியும் இடமே Heidelberg City.
இரண்டாம் உலகப்போரின் போது நகரம் முழுமையாக அழிக்கப்பட்டது, ஆனாலும் குறுகிய தெருக்கள், அழகிய வீடுகளின் வடிவமைப்பு மற்றும் Heidelberg Castle சுற்றுலா பயணிகளை பல நூற்றாண்டுகளுக்கு முன்பு அழைத்து செல்கிறது.
முனிச்
ஜேர்மனியின் செல்வ செழிப்பான நகரம் முனிச், இது சமகால மற்றும் பழமையான கட்டிடங்களின் கலவையாகும்.
ஜேர்மன் பீர் திருவிழாவுக்கு(Oktoberfest) புகழ்பெற்றதும் இந்நகரமே.
அரண்மனைகள், அருங்காட்சியகங்கள், உள்ளூர் மக்களின் வாழ்க்கை மற்றும் பாரம்பரியம் என அனைத்தையும் இங்கு காணலாம்.
Berlin Museum Island
யுனெஸ்கோவால் பாரம்பரிய சின்னமாக அறிவிக்கப்பட்டுள்ளது Berlin Museum Island.
விலைமதிப்பற்ற பொக்கிஷங்களை கொண்டுள்ள இந்த அருங்காட்சியகம், உலகின் மிகவும் புகழ்பெற்றது ஆகும்.
இங்கு எகிப்து, ரோம், கிரீஸ் போன்ற பண்டைய நாகரீக காலம் பற்றியும் அறிந்து கொள்ளலாம்.
Cologne
ஜேர்மனியின் மிகப்பழமையான நகரம் இது, சுமார் 2000 ஆண்டுகள் பழமையானது.
Cologne Cathedral மற்றும் Cologne Chocolate Museum என இரண்டுமே இங்கு கட்டாயம் பார்க்க வேண்டிய இடங்களில் ஒன்று.
இங்கு பழைய நகர வடிவமைப்பு, கூழாங்கற்களால் ஆன தெருக்கள், வரலாற்று கட்டிடங்கள் என அழகால் கவர்ந்திருக்கிறது.
Lindau
மிகப்பிரபலமான வரலாற்று நகரமான Lindau, ஆஸ்திரியா, ஜேர்மனி மற்றும் சுவிஸ் நாட்டு எல்லைகளில் அமைந்துள்ளது.
ஒரு பாலம் மற்றும் ரயில் இணைப்பே நகரத்துடன் இணைக்கிறது. சுற்றுலா பயணிகளுக்கு கட்டிடக்கலையில் சிறந்த அனுபவத்தை கொடுக்கும் Lindau, கோடைகாலத்தில் பார்க்க சிறந்தது.
இதுதவிர சைக்கிளிங், நீச்சல், படகுப்பயணம் என சாகச விரும்பிகளும் நிச்சயம் இங்கு பயணிக்கலாம்.
Mount Zugspitze
ஜேர்மனியின் மிக உயரமான மலைச்சிகரம், 2962 மீட்டர் உயரம் கொண்டது. இங்கு அதிகளவில் குகைகளும், இரண்டு பெரிய பனிப்பாறைகளும் உண்டு.
இதன் அற்புதமான அழகை கண்டு ரசிக்க உலகம் முழுவதிலும் இருந்து சுற்றுலா பயணிகள் படையெடுக்கின்றனர்.
Black Forest, Holstentor, Sanssouci Palace, Romantic Rhine மற்றும் Frauenkirche Church இன்னும் பல சுற்றுலா தளங்களும் ஜேர்மனியில் உண்டு.