ஜேர்மனியில் தண்டவாளங்களை ஏற்றிவந்த ட்ரக் மீது ரயில் மோதி விபத்து: ஒருவர் பலி
ஜேர்மன் நகரமொன்றில் ட்ரக் ஒன்றின் மீது அதிவேக ரயில் ஒன்று மோதியதில் ஒருவர் பலியானார், 12க்கும் அதிகமானோர் காயமடைந்துள்ளார்கள்.
ஜேர்மனியில் ட்ரக் மீது ரயில் மோதி விபத்து
ஜேர்மனியின் ஹாம்பர்க் நகரில் அமைந்துள்ள ஆளில்லா ரயில்வே கிராசிங் ஒன்றை, தண்டவாளங்கள் ஏற்றிவந்த ட்ரக் ஒன்று கடக்க முயலும்போது, அதிவேக ரயில் ஒன்று அந்த ட்ரக் மீது மோதியுள்ளது.
இந்த விபத்தில் சுமார் 13 பேர் காயமடைந்துள்ளனர்.
அவர்களில் படுகாயமடைந்த ஒருவருக்கு மருத்துவ உதவிக்குழுவினர் அவசர சிகிச்சையளித்தும், அவர் மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்படும் வழியில் உயிரிழந்துள்ளார்.
அந்த ரயிலில் 250க்கும் அதிகமான பயணிகள் இருந்த நிலையில், அவர்கள் யாருக்கும் காயம் ஏற்படவில்லை என அதிகாரிகள் தெரிவித்துள்ளார்கள்.
எதனால் இந்த விபத்து நிகழ்ந்தது என்பதை அறிவதற்காக அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |