புலம்பெயர்தலைக் கட்டுப்படுத்துதல் தொடர்பில் ஜேர்மனி பிரித்தானியா ஒப்பந்தம்: சில தகவல்கள்
பிரான்சிலிருந்து பிரித்தானியாவுக்குள் புலம்பெயர்ந்தோரைக் கடத்துவோருக்கு எதிராக, பிரித்தானியாவுடன் கைகோர்க்க ஜேர்மனி முடிவு செய்துள்ளது.
அதன்படி, பிரான்சிலிருந்து பிரித்தானியாவுக்குள் புலம்பெயர்ந்தோரைக் கடத்தும் ஆட்கடத்தல் கும்பல்களைக் கட்டுப்படுத்தும் ஒப்பந்தம் ஒன்றில், ஜேர்மன் உள்துறை அமைச்சரும், பிரித்தானிய உள்துறைச் செயலரும் கையெழுத்திட்டுள்ளார்கள்.
ஒப்பந்தத்தில் என்ன கொடுக்கப்பட்டுள்ளது?
ஆங்கிலக்கால்வாய் வழியாக ஆபத்தான வகையில் பிரித்தானியாவுக்குள் நுழைய புலம்பெயர்ந்தோருக்கு உதவும் விடயத்தின் பின்னணியில் பிரான்சிலுள்ளவர்கள் இருப்பதாக கருதப்பட்டது.
ஆனால், அப்படி புலம்பெயர்ந்தோரை ஆபத்தான வகையில் ஆங்கிலக்கால்வாய் மூலம் அனுப்புவதில் ஜேர்மனியை மையமாகக் கொண்ட சில கும்பல்கள் இருப்பது தற்போது தெரியவந்துள்ளது.
PA Media
ஆகவே, சிறுபடகுகள் மூலம் ஆங்கிலக்கால்வாய் வழியாக பிரான்சிலிருந்து பிரித்தானியாவுக்குள் புலம்பெயர்ந்தோரைக் கடத்தும் ஆட்கடத்தல் கும்பல்களைக் கட்டுப்படுத்தும் ஒப்பந்தம் ஒன்றில், ஜேர்மன் உள்துறை அமைச்சரான நான்சி ஃபேஸரும், பிரித்தானிய உள்துறைச் செயலரான Yvette Cooperம் கையெழுத்திட்டுள்ளார்கள்.
அந்த ஒப்பந்தத்தின்படி, ஜேர்மனியின் புலம்பெயர்தல் சட்டத்தில், புலம்பெயர்வோரை பிரித்தானியாவுக்குள் கடத்த உதவுவதை குற்றமாக்கும் வகையில் மாற்றம் செய்யப்பட உள்ளது.
ஆகவே, புலம்பெயர்ந்தோரை பிரித்தானியாவுக்குள் அனுப்ப உதவும் ஆபத்தான வகையிலான சிறு படகுகள் முதலான கருவிகளை வழங்குபவர்கள் மற்றும், சேமித்துவைப்பவர்களையும் பிடிக்க ஜேர்மன் அதிகாரிகளுக்கு இந்த சட்ட மாற்றம் உதவி செய்யும்.
ஆக, ஜேர்மனியும் பிரித்தானியாவும் இணைந்து இந்த ஆட்கடத்தல்காரர்களைக் கட்டுப்படுத்த இந்த சட்ட மாற்றம் உதவியாக இருக்கும் என இரு நாடுகளும் நம்புகின்றன.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |