பெர்லின் லண்டனை இணைக்கும் புதிய ரயில் பாதை: ஜேர்மனியுடன் பிரித்தானியா ஒப்பந்தம்
ஜேர்மன் சேன்சலர் பதவியேற்றதுமே பரபரப்பாக ஐரோப்பிய நாடுகளுடனான உறவுகளை வலுப்படுத்தும் முயற்சிகளை மேற்கொண்டு வருகிறார்.
அவ்வகையில், பிரித்தானியாவுக்கு அரசு முறைப்பயணமாக சென்றுள்ளார் அவர். இரு நாடுகளும் புலம்பெயர்தல், தொழில் மற்றும் பாதுகாப்பு தொடர்பிலான முக்கிய ஒப்பந்தம் ஒன்றில் கையெழுத்திட்டுள்ளன.
பெர்லின் லண்டனை இணைக்கும் புதிய ரயில் பாதை
இந்நிலையில், ஜேர்மன் தலைநகரான பெர்லினையும் லண்டனையும் நேரடியாக இணைக்கும் வகையில் புதிய ரயில் பாதை ஒன்றை அமைக்க இரு நாடுகளும் சம்மதம் தெரிவித்துள்ளன.
இந்த புதிய ரயில் பாதை, வருங்காலத்தில் விமான மார்க்கத்துக்கு மாற்றாக அமையும் என பிரித்தானிய போக்குவரத்துச் செயலரான Heidi Alexander தெரிவித்துள்ளார்.
இரு நாடுகளுக்கும் இடையிலான வர்த்தகம் மற்றும் வணிகம் தொடர்பிலான உறவுகளை மீண்டும் மேம்படுத்திக்கொள்ளும் வகையிலான திட்டத்தின் ஒரு பகுதியாக இந்த புதிய ரயில் பாதை குறித்த திட்டம் முன்வைக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |