போர் வந்தால்... ஜேர்மன் மக்கள் பாதுகாப்பு தொடர்பில் ஏமாற்றமளிக்கும் ஒரு தகவல்
மத்திய கிழக்கு நாடுகளில் நிலவும் போர்ச்சூழல் பெரிதாகிவிடுமோ என்னும் அச்சம், உலக நாடுகள் பலவற்றிலும் நிலவுவதை மறுப்பதற்கில்லை.
இந்நிலையில், ஒருவேளை போர் வெடிக்குமானால், ஜேர்மனியில் மக்கள் தங்கள் பாதுகாப்புக்கான விடயங்களை, தாங்களே தயார் செய்துகொள்ளும் நிலைதான் காணப்படுகிறது.
பாதுகாப்பு தொடர்பில் ஏமாற்றமளிக்கும் ஒரு தகவல்
ஆம், ஜேர்மனியில், போர் வரும் பட்சத்தில் மக்கள் பாதுகாப்பாக தங்கும் வகையிலான 579 பங்கர்கள் என்னும் பாதுகாப்பு அறைகள் உள்ளன. என்றாலும் அவை மக்கள் பயன்படுத்த இயலாத நிலையில் உள்ளன.

அவ்வகையில், ஜேர்மனியின் Cologne நகரில், சுரங்க ரயில் பாதை ஒன்றின் கீழ் அமைந்துள்ள பங்கரை பார்க்கும்போது, பார்ப்பதற்கு அது அழகாக இருந்தாலும், இன்றைய சூழலில் அங்கு மக்கள் தங்கும் நிலையில் அது இல்லை.
போர் வரும் பட்சத்தில் சுமார் 2,300 பேர் பாதுகாப்பாக இரண்டு வாரங்கள் வரை தங்கும் வகையில் அமைக்கப்பட்ட அந்த பங்கர், சொல்லப்போனால், இன்று செயல்படாத நிலையில் உள்ளது.
இதற்கிடையில், ஜனவரியில், பெர்லினிலுள்ள Lichterfelde என்னுமிடத்தில் அமைந்துள்ள மின் நிலையம் ஒன்றில் தீப்பற்றியது. அதன் காரணமாக, தென்மேற்கு பெர்லினிலுள்ள 45,000 வீடுகளிலும், 2,200 அலுவலகங்களிலும் மின் இணைப்பு துண்டிக்கப்பட்டு மக்கள் இருளில் அவதியுற நேர்ந்தது.
அதையே சமாளிக்கும் நிலையில் ஜேர்மனியில் வசதிகள் இல்லாத நிலையில், போர் வெடிக்குமானால், அதை எதிர்கொள்ளும் நிலையில் ஜேர்மனி இல்லை என எச்சரிக்கிறார்கள் நிபுணர்கள்.
ஆகவே, அதுபோன்ற ஒரு துரதிர்ஷ்டமான நிலை ஏற்படும் பட்சத்தில், மக்கள் தங்களைத் தாங்களே பாதுகாத்துக்கொள்ளும் நிலை காணப்படுவதால், சில நகரங்களில், போர் வெடித்தால் 10 நாட்கள் வரை பாதுகாப்பாக இருப்பது எப்படி என்பது குறித்து பயிற்சிகளில் ஈடுபடத் துவங்கியுள்ளார்கள் மக்கள்!
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் |