ஜேர்மனியில் புகலிடம் கோரி விண்ணப்பிப்போர் எண்ணிக்கையில் வீழ்ச்சி
ஜேர்மனியில் புகலிடம் கோரி விண்ணப்பிப்போர் எண்ணிக்கை வீழ்ச்சி அடைந்துள்ளது.
அரசு உதவி பெறுவோர் எண்ணிக்கையும் குறைந்தது
ஜேர்மனியில் அரசு உதவி பெறுவோர் எண்ணிக்கை, 2023இல் 513,700 ஆக இருந்தது, 2024இல் 10 சதவிகிதம் குறைந்து 461,000 ஆகியுள்ளது.
சுமார் 10 ஆண்டுகளில் முதன்முறையாக, ஐரோப்பிய ஒன்றியத்தில் அதிக புகலிடக்கோரிக்கை விண்ணப்பங்கள் முன்வைக்கப்படும் நாடுகள் பட்டியலில் முதலிடத்தையும் இழந்துள்ளது ஜேர்மனி.
அதிக புகலிடக்கோரிக்கை விண்ணப்பங்கள் முன்வைக்கப்படும் நாடுகள் பட்டியலில் முதலிடம் பிடித்துள்ள நாடு பிரான்ஸ் (78,000 விண்ணப்பங்கள்).
இரண்டாவது இடத்திலிருக்கும் நாடு ஸ்பெயின் (77,000 விண்ணப்பங்கள்). ஜேர்மனி பட்டியலில் மூன்றாவது இடத்தை அடைந்துள்ளது.
2025ஆம் ஆண்டின் நடுப்பகுதி நிலவரப்படி ஜேர்மனியில் புகலிடம் கோரி விண்ணப்பித்தவர்கள் எண்ணிக்கை 70,000 ஆகும்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |