ரஷ்யாவுக்கு ஆதரவளிப்பது தொடர்பில் சீனாவுக்கு ஜேர்மனி எச்சரிக்கை
உக்ரைன் போரில் ரஷ்யாவுக்கு ஆதரவளிப்பது தொடர்பில் சீனாவை எச்சரித்துள்ளது ஜேர்மனி.
சீனாவை எச்சரித்த ஜேர்மனி
நேற்று சீனா சென்ற ஜேர்மன் வெளியுறவுத்துறை அமைச்சரான அனலேனா பேர்பாக், ரஷ்ய ஜனாதிபதி புடின், ஆசியாவை உக்ரைன் போருக்குள் இழுப்பதாக சீனாவிடம் எச்சரித்துள்ளார்.
சீன வெளியுறவுத்துறை அமைச்சரான வாங் யியை சந்தித்த அனலேனா, சீனா ரஷ்யாவுக்கு ஆதரவளிப்பதற்காக ட்ரோன்கள் அல்லது ட்ரோன்களுக்கான பாகங்களை வழங்குவது தொடர்பான குற்றச்சாட்டுகள் குறித்து விவாதித்தார்.
ரஷ்ய உக்ரைன் போரில் ரஷ்யாவுக்கு சீனா ஆதரவளிப்பது, ஜேர்மனி சீனா ஆகிய நாடுகளுக்கிடையிலான உறவுகளை பாதிக்கக்கூடும் என அவர் தெரிவித்ததாக வெளியுறவு அலுவலக அறிக்கை ஒன்று கூறுகிறது.
சீனத் தொழிற்சாலைகளில் தயாரிக்கப்படும் ட்ரோன்களும், வடகொரிய படைகளும் மத்திய ஐரோப்பாவின் அமைதியைக் கெடுப்பது ஐரோப்பிய பாதுகாப்பு குறித்த மைய விடயங்களை மீறுவதாகும் என்றும் கூறியுள்ளார் அவர்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |