புடின் உலகப் போரைத் தூண்டினால்., ஜேர்மனி வெளியிட்டுள்ள 10 வார்த்தை எச்சரிக்கை
உக்ரைன் மீது புடின் முன்னெடுத்து வரும் தாக்குதல், மூன்றாவது உலகப் போரை துவக்கலாம் என்ற அச்சம் அதிகரித்துள்ள நிலையில், போருக்கு தயார்நிலையில் இருப்பது அவசியம் என ஜேர்மனி எச்சரிக்கை செய்துள்ளது.
ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடின் மூன்றாம் உலகப் போரைத் தூண்டி, ஐரோப்பாவை தாக்கக்கூடும் என்ற அச்சம் அதிகரிப்பதால் ஜேர்மனி 10 வார்த்தையில் மிகப்பெரிய எச்சரிக்கையை வெளியிட்டுள்ளது.
ஜேர்மன் பாதுகாப்புத் துறை அமைச்சர் போரிஸ் பிஸ்டோரியஸ் () வெளியிட்ட இந்த எச்சரிக்கையில், "புடின் தாக்குதல் நடத்தினால், ஜேர்மனி போர் தொடுக்க தயாராக இருக்க வேண்டியது அவசியம்" என்று கூறியுள்ளார்.
புடினால் உருவாகும் அபாயம்
2022 பிப்ரவரியில் உக்ரைனில் தாக்குதல்களைத் துவக்கிய புடின், தற்போது மேற்கத்திய நாடுகள் வழங்கிய ஆயுதங்களை உக்ரைன் பயன்படுத்துவது தொடர்பாக அச்சுறுத்தல்களை விடுத்துள்ளார்.
இது ஐரோப்பாவையும் தாக்கக்கூடிய அபாயத்தை உருவாக்கும் என கணிக்கப்பட்டுள்ளது.
பாதுகாப்பு பட்ஜெட் உயர்த்த வேண்டிய அவசியம்
பாதுகாப்பு தயார்நிலையை உறுதி செய்ய, ஜேர்மனி 2028 வரை வருகை செலவுகளை வருடத்திற்கு 80 முதல் 90 பில்லியன் யூரோ வரை உயர்த்த வேண்டும் என பிஸ்டோரியஸ் வலியுறுத்தியுள்ளார்.
"நமது பாதுகாப்பு நிலைமை மோசமாகும் சூழலில், ஜேர்மனியின் கடன் வரம்பில் மாற்றம் செய்யவேண்டும்" என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
பாதுகாப்புச் செலவுகளை சாதாரண பட்ஜெட்டிலிருந்து மேற்கொண்டால், அரசின் செயல்பாடுகள் பாதிக்கப்படும் எனவும் அவர் எச்சரித்தார்.
மேலும், ஜேர்மன் ராணுவம், உக்ரைனில் அமைதி பாதுகாப்பு குழுவில் ஈடுபடக்கூடிய வாய்ப்பு இருப்பதாக பிஸ்டோரியஸ் தெரிவித்தார்.
ஜேர்மனியின் இந்த புதிய நடவடிக்கைகள், பாதுகாப்பை உறுதி செய்ய தேவையான முக்கிய முடிவுகளை எடுத்துள்ளதற்கான அடையாளமாகும்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |