கிரீன்லாந்து ஆக்கிரமிப்பு மிரட்டலை கண்டித்து ட்ரம்ப்பை எச்சரித்த ஜேர்மன் சேன்சலர்
கிரீன்லாந்து ஆக்கிரமிப்பு மிரட்டலை கண்டித்து ட்ரம்ப்பை ஜேர்மனி எச்சரித்துள்ளது.
ஜேர்மனியின் சேன்சலர் ஒலாஃப் ஷோல்ஸ் (Olaf Scholz), கிரீன்லாந்து மீது ஆக்கிரமிப்பு மிரட்டல் விடுத்துள்ள அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்ப் மீது கடும் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
ஷோல்ஸ், புதன்கிழமை ஐரோப்பிய நாடுகளின் தலைவர்கள் மற்றும் யூரோப்பிய கவுன்சில் தலைவர் ஆகியோருடன் உரையாடல் நடத்தினார்.
அப்போது, அமெரிக்காவின் தற்போதைய நடவடிக்கைகள் குறித்து சில புரியாத நிலை இருப்பதாக சோல்ஸ் கூறினார். ஆனால் அவர் ட்ரம்ப்பின் பெயரை குறிப்பிடவில்லை.
டென்மார்க்கின் ஒரு பகுதியான கிரீன்லாந்தை கையகப்படுத்துவது குறித்து ஜனாதிபதியாக தேர்ந்தெடுக்கப்பட்டவர் வெளிப்படையாக குரல் கொடுத்து வருகிறார் என்றும், பனாமா கால்வாயின் கட்டுப்பாட்டை மீண்டும் பெற அமெரிக்க ராணுவத்தை பயன்படுத்த மாட்டோம் என்றும் அவர் உறுதியளிக்க மறுத்துவிட்டார் என்றும் கூறினார்.
எல்லைகள் மாற்றப்படுவதை அங்கீகரிக்க முடியாது என்று வலியுறுத்திய ஷோல்ஸ், “அரசியல் எல்லைகள் வலுவிழக்கக் கூடாது என்பது நீண்டகால நியதி, இது எந்த நாடாக இருந்தாலும், அது ஒரு சிறிய நாடா அல்லது வலுவான நாடா என்பதை பொருட்படுத்தாமல் பின்பற்றப்பட வேண்டும்.” என்று கூறியுள்ளார்.
மேலும், எல்லைகளை மதிப்பது "சர்வதேச சட்டத்தின் அடிப்படைக் கொள்கை" மற்றும் மேற்கத்திய மதிப்புகளின் ஒரு பகுதி என்று ஷோல்ஸ் கூறினார்.
ட்ரம்ப் இரண்டாவது ஆட்சி காலத்திற்கு தயாராகிக்கொண்டிருக்கும் நிலையில், சர்வதேச நாடுகள் அவரின் எதிர்கால நடவடிக்கைகள் குறித்து எச்சரிக்கையாக உள்ளன.
ஜேர்மன் சேன்சலர் ஷோல்ஸ், நாடுகள் ஒற்றுமையாக செயல்பட வேண்டும் என்பதை வலியுறுத்தினார். கிரீன்லாந்தை மீண்டும் வாங்க ட்ரம்ப் எடுத்துள்ள முயற்சியைக் கடுமையாக விமர்சித்துள்ளார்.
அதே நேரத்தில், அமெரிக்க வெளியுறவுத் துறை செயலாளர் அன்டனி ப்ளிங்கன், இதுபோன்ற விரிவாக்கம் "சாத்தியமில்லை" என்று தெரிவித்துள்ளார்.
அமெரிக்கா மற்றும் கனடாவை இணைக்கவும் ட்ரம்ப் தனது புதிய திட்டத்தை முன்வைத்துள்ளார், இதனால் சர்வதேச சமூகம் அதிர்ச்சியடைந்துள்ளது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |
Germany warns Trump after Greenland takeover threat, German Chancellor Olaf Scholz, Olaf Scholz