குரங்குகளைக் கொன்று சிங்கங்களுக்கு இரையாக்கிய ஜேர்மன் உயிரியல் பூங்கா
ஜேர்மன் உயிரியல் பூங்கா ஒன்றில் 12 குரங்குகள் கொல்லப்பட்ட விடயம், விலங்குகள் நல ஆர்வலர்களிடையே கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.
12 குரங்குகள் கொல்லப்பட்ட விடயம்
தெற்கு ஜேர்மனியின் Nuremberg நகரில் அமைந்துள்ள உயிரியல் பூங்காவில் வளர்க்கப்பட்டுவந்த Guinea baboon வகை குரங்குகளில் 12 குரங்குகள் நேற்று கொல்லப்பட்டன.
அந்த உயிரியல் பூங்காவில் 25 குரங்குகள் மட்டுமே வாழ இடம் இருக்கும் நிலையில், குரங்குகள் எண்ணிக்கை 40 ஆகிவிட்டது.
ஆகவேதான் 12 குரங்குகள் கொல்லப்பட்டதாக உயிரியல் பூங்காவின் இயக்குநரான Dag Encke தெரிவித்துள்ளார்.
மேலும், இப்படி சில விலங்குகளைக் கொன்று சிங்கம், புலி போன்ற விலங்குகளுக்கு உணவாக்குவது வழக்கம்தான் என்றும், சில விலங்குகள் அதற்காகவே வளர்க்கப்படுவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
இந்நிலையில், 12 குரங்குகள் கொல்லப்பட்ட விடயம் விலங்குகள் நல ஆர்வலர்களைக் கொந்தளிக்கச் செய்துள்ளது.
விலங்குகளை வளர்க்க இடம் இல்லையென்றால், ஏன் அவை இனப்பெருக்கம் செய்ய அனுமதிக்கப்பட்டன என அவர்கள் கேள்வி எழுப்பியுள்ளார்கள்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |