தடுப்பூசி தட்டுப்பாட்டைத் தவிர்க்க ஐரோப்பிய ஒன்றியத்தை மீறி ஜேர்மனி எடுத்துள்ள முடிவு
தடுப்பூசி தட்டுப்பாட்டைத் தவிர்ப்பதற்காக ஐரோப்பிய ஒன்றியத்தை மீறி ஒரு முடிவை எடுத்துள்ளது ஜேர்மனி.
ஆம், நேரடியாக ரஷ்யாவிடமிருந்து Sputnik V கொரோனா தடுப்பூசியை வாங்குவது என ஜேர்மனி முடிவு செய்துள்ளது.
ரஷ்யாவுடன் அதற்கான பேச்சு வார்த்தைகளில் இறங்கவுள்ளது ஜேர்மனி.
ஜேர்மனியின் இந்த முடிவு குறித்து, கூட்டம் ஒன்றில் ஜேர்மன் சுகாதாரத்துரை அமைச்சரான Jens Spahn ஐரோப்பிய சுகாதார அமைச்சர்களிடம் தெரிவித்துள்ளதாக நம்பப்படுகிறது.
அதே நேரத்தில், ஐரோப்பிய ஒன்றியத்தின் மருந்துகள் ஒழுங்குமுறை அமைப்பு அந்த தடுப்பூசிக்கு ஒப்புதல் அளிக்கும் வரை தடுப்பூசி வாங்கப்போவதில்லை என்றும் ஜேர்மனி முடிவுசெய்துள்ளது.