சொன்னதுபோலவே புகலிடக்கோரிக்கையாளர்களை திருப்பி அனுப்பிய ஜேர்மனி
ஜேர்மனியின் புதிய அரசு பதவியேற்றதும், ஜேர்மன் சேன்ஸலர் சொன்னதுபோலவே, புகலிடக்கோரிக்கையாளர்களை எல்லையிலேயே ஜேர்மன் அதிகாரிகள் திருப்பி அனுப்பியுள்ளதாக தகவல்கள் வெளியாகிவருகின்றன.
சொன்னதைச் செய்த ஜேர்மனி
ஜேர்மனியில் பிரெட்ரிக் மெர்ஸ் தலைமையில் புதிய ஆட்சி அமைக்கப்பட்ட இரண்டு நாட்களிலேயே சுமார் 19 புகலிடக்கோரிக்கையாளர்களை எல்லையிலேயே அந்நாடு திருப்பி அனுப்பியதாக தகவல் வெளியாகியுள்ளது.
கடந்த வியாழன் மற்றும் வெள்ளி ஆகிய இரண்டு நாட்களில், 365 ஆவணங்களற்ற புலம்பெயர்வோர் ஜேர்மன் எல்லைகள் வழியாக ஜேர்மனிக்குள் நுழைந்த நிலையில், 19 புகலிடக்கோரிக்கையாளர்கள் உட்பட, அவர்களில் 286 பேர் திருப்பி அனுப்பப்பட்டதாக Bild am Sonntag ஊடகம் தெரிவித்துள்ளது.
மேலும், அந்த இரண்டு நாட்களில் 48 கைது வாரண்டுகள் பிறப்பிக்கப்பட்டுள்ளன, 14 கடத்தல்காரர்கள் கைது செய்யப்பட்டுள்ளார்கள், தீவிர கருத்துக்கள் கொண்ட 9 பேர் பிடிபட்டுள்ளார்கள்.
அதே நேரத்தில், எளிதில் ஆபத்துக்குள்ளாகும் அபாயத்திலிருக்கும் நான்கு பேர் ஜேர்மனிக்குள் அனுமதிக்கப்பட்டுள்ளதும் குறிப்பிடத்தக்கது.
ஆக, புதிதாக பொறுப்பேற்றுள்ள ஜேர்மனி அரசு தான் சொன்னதுபோலவே புகலிடக்கோரிக்கையாளர்களை திருப்பி அனுப்பிவிட்டது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |