பண்டிகை காலங்களில் சருமத்தை பளபளப்பாக வைத்து கொள்ள வேண்டுமா? இதோ சூப்பரான டிப்ஸ்
பொதுவாக பண்டிகை என்றாலே முகத்தை அழகுடன் வைத்து கொள்ள நம்மி்ல பல பெண்கள் அடிக்கடி அழகு நிலையங்களுக்கு செல்வது வழக்கம்.
ஆனால் இதனால் எவ்வித பயனும் இல்லை. பணத்தையும் நேரத்தையும் செலவு செய்வது தான் மிச்சம் .
இதனை தவிர்த்து வீட்டில் இருக்கும் பொருட்கள் கொண்டே முகத்தை பளபளப்பாக வைத்து கொள்ள முடியும்.
அந்தவகையில் பண்டிகை காலங்களில் முகத்தை அழகுடன் வைத்து கொள்ள என்ன மாதிரியான முறைகளை கையாளலாம் என்று பார்ப்போம்.
- 1 வாழைப்பழம், பச்சை பால் மற்றும் தேன் கலந்து மென்மையான பேஸ்ட்டை உருவாக்கவும். இந்த பேஸ்ட்டில் சில துளிகள் ரோஸ் வாட்டர் சேர்த்து முகம் மற்றும் கழுத்தில் தடவவும்.
15 நிமிடங்கள் விட்டுவிட்டு சாதாரண நீரில் கழுவி வந்தால் நல்ல பயனை பெறலாம்.
- ஒரு பெரிய கிண்ணத்தில் 1/2 கப் மோர் எடுத்துக் அதனை தயிருடன் கலந்து முகத்தில் தடவவும். ஒரு மணி நேரம் அப்படியே இருக்கட்டும். உங்கள் முகத்தை தண்ணீரில் கழுவி வருவது நல்லது.
- ஒரு பாத்திரத்தில் 2 டேபிள் ஸ்பூன் கடலை மாவு அல்லது உளுத்தம்பருப்பு, ஒரு சிட்டிகை மஞ்சள் மற்றும் தயிர் சேர்த்து பேஸ்ட் செய்யவும். பேஸ்ட்டை உங்கள் தோலில் சமமாக தடவி 15 முதல் 20 நிமிடங்கள் விடவும். பேஸ்ட் காய்ந்தவுடன், உங்கள் முகத்தை கழுவி வந்தால் மாற்றத்தை பார்க்கலாம்.
- ஒரு டீஸ்பூன் பால் பவுடரை எடுத்து இரண்டு டீஸ்பூன் தயிர் சேர்த்து மென்மையான பேஸ்ட்டை உருவாக்கவும். இதனுடன் அரை டீஸ்பூன் எலுமிச்சை சாறு சேர்க்கவும். இந்த பேஸ்ட்டை உங்கள் முகம் மற்றும் கழுத்தில் தடவி 15 - 20 நிமிடங்கள் அப்படியே வைக்கவும். பின்னர், சாதாரண நீரில் கழுவி வந்தால் நல்ல மாற்றத்தை காணலாம்.
- ஒரு பெரிய கிண்ணத்தில் பாதி நடுத்தர அளவிலான பப்பாளியை சிறிதுசிறிதாக வெட்டி எடுத்துக் கொள்ளவும். 2 டேபிள் ஸ்பூன் தேன் சேர்த்து நன்கு கலந்து பேஸ்ட்டை உருவாக்கவும். இந்த கலவையை உங்கள் முகத்தில் தடவவும். 15 நிமிடங்களுக்குப் பிறகு உங்கள் முகத்தை தண்ணீரில் கழுவவும். இதனால் பளபளப்பான சருமத்தை பெறலாம்.

தமிழ் படிக்க ஆசிரியர் இல்லையே என்ற கவலை இனியும் வேண்டாம். uchchi.com இன் இணையவழிக் கற்கை நெறிகளில் இன்றே இணையுங்கள்.