நரசிம்ம கோயிலில் தியானம் செய்தால் பணம் கொட்டும்.., யூடியூபில் ஜோதிடர் கூறியதால் அலைமோதிய கூட்டம்
யூடியூபில் ஜோதிடர் ஒருவர் கூறியதை கேட்டு நரசிம்ம சுவாமி கோயிலில் மக்கள் கூட்டம் திடீரென அலைமோதியுள்ளது.
பெருகிய மக்கள் கூட்டம்
தமிழக மாவட்டமான நாமக்கல்லில் பிரசித்தி பெற்ற நரசிம்மன் கோயில் உள்ளது. இங்கு நேற்று மார்கழி முதல் நாளில் உள்ளூர் பக்தர்கள் கடவுளை தரிசிக்க கூடினர்.
அப்போது, வழக்கத்திற்கு மாறாக ஆயிரக்கணக்கான வெளியூர் பக்தர்கள் கூடினர். அவர்களிடம் விசாரித்த போது தான் யூடியூபில் ஜோதிடர் கூறியதை கேட்டு வந்துள்ளனர் என்று தெரியவந்தது.
அதாவது, ராகு, கேது பெயர்ச்சி நடக்கவிருப்பதால் நரசிம்ம சுவாமி கோயில் வடக்கு நோக்கி அமர்ந்து ஓம் ஸ்ரீ ஓம் என்ற மந்திரத்தை 45 நிமிடம் கூற வேண்டும். அவ்வாறு செய்தால் பொருளாதாரத்தில் நல்ல செல்வம் கிடைக்கும்.
உங்களைத் தேடி பணம் கொட்டும் என்று யூடியூப் சேனலில் ஜோதிடர் ஒருவர் கூறியதை கேட்டு அதிகாலையிலேயே பக்தர்கள் திரண்டுள்ளனர்.
ஆனால், இதுகுறித்து கோயிலுக்கு எந்தவொரு தகவலும் அளிக்கப்படவில்லை. இதனால், கோயிலில் மக்கள் கூட்டம் அதிகமானது.
இதையடுத்து, ஜோதிடர் தலைமையில் காலை 6.35 முதல் 7.25 மணி வரை வடக்கு நோக்கி அமர்ந்து மக்கள் பிரார்த்தனை மேற்கொண்டனர்.
கோயிலுக்கு வந்த மக்கள் தங்களுடைய வாகனங்களை சாலையில் நிறுத்தியதால் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |