உங்கள் புருவத்தில் வெள்ளை முடி இருக்கா? கவலையை விடுங்க! இதனை கருமையாக்க இதோ சூப்பர் டிப்ஸ்
பொதுவாக வயதாக வயதாக உடலில் சில மாற்றங்கள் நடைபெறும். அதில் ஒன்று தான் நரைமுடி பிரச்சினை.
அதிலும் சிலருக்கு தலையில் மட்டுமின்றி புருவத்திலும் நரைமுடி வருகின்றது. பலருக்கும் இது மிக மோசமான அனுபவத்தை தர கூடும்.
இப்படி புருவத்தில் நரை முடி உருவாவதற்கு பலவித காரணிகள் உண்டு. நரைகள் ஏற்பட்டால் அவ்வளவு சீக்கிரத்தில் நம்மால் அதனை போக்கி விட முடியாது.
இதற்கு ஒரு சில வீட்டு வைத்தியங்களை உள்ளன.
இதனை பயன்படுத்தி நம்மால் தீர்வை பெற இயலும். தற்போது அவை என்னென்ன என்பதை பார்ப்போம்.
- பிளாக் டீ மற்றும் பிளாக் காபியை நன்றாக கலந்து கொள்ளவும். அடுத்து இதனை புருவத்தில் தடவவும். 15 நிமிடம் கழித்து புருவத்தில் உள்ள இந்த ஐப்ரோ பேக்கை பஞ்சை வைத்து துடைத்து விடலாம்.
- தினமும் 2 முறை ஆமணக்கு எண்ணெய் அல்லது ஆலிவ் எண்ணெய்யை புருவத்தில் தடவி வந்தால் இளம் வயதில் நரைத்தல் நிகழ்வு தடை செய்யப்படும். மேலும், புருவம் கரு கருவென வளரவும் இந்த குறிப்பு உதவும்.
- நெல்லியை வேக வைத்து அரைத்து கொண்டு புருவத்தில் தடவினால் புருவத்தில் உள்ள வெள்ளை முடிகள் கருமை பெறும்
- சூரிய ஒளியும் அடங்கும். தினமும் 15 நிமிடம் இளம் வெயிலில் இருந்தாலே இது போன்ற நரை பிரச்சினை உங்களுக்கு உண்டாகாது.
- வைட்டமின் பி12 அதிகம் கொண்ட உணவுகளை சாப்பிட்டு வந்தால் நரைகளின் பாதிப்பில் இருந்து தப்பித்து கொள்ளலாம்.

தமிழ் படிக்க ஆசிரியர் இல்லையே என்ற கவலை இனியும் வேண்டாம். uchchi.com இன் இணையவழிக் கற்கை நெறிகளில் இன்றே இணையுங்கள்.